சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: முதலிடம் பிடித்த கோவை மாவட்ட மாணவர்கள் 98.10% பேர் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கோவை மாவட்ட மாணவர்கள் 98.10% பேர் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று www.tnresults.nic.in, https://dge1.tn.nic.in/ , http://dge2.tn.nic.in/ ஆகிய இணையதளங்களில் வெளியாகியுள்ளது. கோவை, விருதுநகர், கரூர் மாவட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளியானது.

TN HSE +1 Examination Results : Coimbatore district students Top

இந்தநிலையில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 8.32 லட்சம் பேர் பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ளனர்.
இந்த தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளில் 96.04% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட 3.11% கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவியர்களில் 97.49 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 94.38 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.. மாணவிகள் அசத்தல்.. ரிசல்ட்டை எப்படி பார்க்கலாம்?பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.. மாணவிகள் அசத்தல்.. ரிசல்ட்டை எப்படி பார்க்கலாம்?

பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் கோவை மாவட்ட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் 98.10% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவையை அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் 97.90% பேர் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும் கரூர் மாவட்டத்தில் 97.51% பேர் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

English summary
The Directorate of Government Exams Tamil Nadu declared Tamil Nadu HSC plus 1 results today. Coimbatore, Viruthunagar and Karur district students bags first 3 places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X