சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமல் வீட்டில் கொரோனா தொடர்பான நோட்டீஸ் ஒட்டிய ஊழியருக்கு பணி வழங்காதது ஏன்.. மனித உரிமை ஆணையம்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க மறுப்பது ஏன் என மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டு வாயிலில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பான நிலையில் நடிகர் கமல்ஹாசனும் இதுகுறித்து விளக்கமளித்தார்.

TN Human Rights Commission asks Municipality about isolation notice pasted in Kamals house

இதனிடையே மாநகராட்சி ஊழியர் தவறுதலாக கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக அங்கிருந்து நோட்டீஸ் அப்புறப்படுத்தப்பட்டது.

எனினும் இந்த நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியர் வினோத்குமாருக்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை. கடந்த மார்ச் 29-ஆம் தேதி முதல் தன்னை பணியில் அனுமதிக்கவில்லை என வினோத்குமார் புகார் தெரிவித்தார்.

மேலும் அதிகாரி சொல்லியே தான் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய நிலையில் தற்போது தனக்கு பணி வழங்காததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ...பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர்பு...பாஜக எச்சரிக்கை!!பாகிஸ்தான் ஐஎஸ்ஐ...பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர்பு...பாஜக எச்சரிக்கை!!

இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டிய ஒப்பந்த ஊழியரை பணியில் சேர்க்க மறுப்பது ஏன்? என்று மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

English summary
TN Human Rights Commission asks Municipality about isolation notice pasted in Kamal's house
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X