சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மக்கள் போடும் ஓட்டு யாருக்கு ? - நேரடி, மறைமுக தேர்தல் முழு விபரம்

தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் வார்டு உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்தாலும் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் மேயர்கள், தலைவர்கள், துணைத்தலைவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் வார்டு உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்தாலும் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் மேயர்கள், தலைவர்கள், துணைத்தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்ய உள்ளனர்.

12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை - குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை - குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று

பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முக மறைமுக தேர்தல்கள்

நேர்முக மறைமுக தேர்தல்கள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி தலைவர் துணைத் தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு நேரடி தேர்தல் நடைபெற்றது. மறைமுக தேர்தல் மூலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். அதே போல சிற்றுராட்சித் தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். துணைத்தலைவர் வார்டு கவுன்சிலர் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

நேரடி தேர்தல் யார் யாருக்கு

நேரடி தேர்தல் யார் யாருக்கு

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி வார்டு உறுப்பினர்கள்,
பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும். 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

1,298 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல்

1,298 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல்

அதே நேரத்தில் மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர், சட்டப்பூர்வ நிலைக்குழுக்கள், மாவட்ட திட்டக்குழுக்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கண்காணிப்பு

சிசிடிவி கண்காணிப்பு

மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய அனைத்து பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக செயல்படுவார்கள். 80,000 காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கண்காணிப்புடன் நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

English summary
TN Local body election:(தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்) In Tamil Nadu local body elections, ward members are directly elected by the people, but the winning ward members are indirectly elected mayors, leaders and vice-presidents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X