சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 மாதமாக என்ன செய்தார்? வைத்த டெஸ்ட்டில் பாஸ் செய்வாரா பிகே? தீவிரமாக ஆலோசிக்கும் ஸ்டாலின்!

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியாக்கள் திமுகவிற்கு எந்த அளவிற்கு உதவி உள்ளது என்பது இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலம் தெரிந்துவிடும்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை அழைத்தது திமுக!

    சென்னை: அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியாக்கள் திமுகவிற்கு எந்த அளவிற்கு உதவி உள்ளது என்பது இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலம் தெரிந்துவிடும். பிரசாந்த் கிஷோரின் செயல்பாடு குறித்து தேர்தல் முடிவிற்கு பின் திமுக ஆலோசிக்கும் என்று கூறுகிறார்கள்.

    2014 லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடிக்கும், பாஜகவிற்கு தேர்தல் நேர ஆலோசகராக பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 2011 குஜராத் சட்டசபை தேர்தலில் மோடிக்காக பிரச்சார யுக்திகளை வகுத்து கொடுத்தார்.

    அந்த தேர்தலில் மோடி வெற்றிபெற காரணமாக அவர் இருந்தார். அதேபோல் 2014 லோக்சபா தேர்தலிலும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பாஜகவால் பயன்படுத்தப்பட்டார். அப்போதும் பாஜக நாடு முழுக்க பிரபலம் அடைந்து வெற்றிபெற்றது.

    குட் மார்க் வாங்கிய செயலாளர்கள்.. உற்சாகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் .. 2020ல் சிக்ஸர் அடிக்க அதிமுக பிளான் குட் மார்க் வாங்கிய செயலாளர்கள்.. உற்சாகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் .. 2020ல் சிக்ஸர் அடிக்க அதிமுக பிளான்

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் தற்போது பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரசாந்த் கிஷோர் எடுத்துள்ளார். அவர் துணை தலைவராக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை பீகாரில் பாஜகவின் கூட்டணியில் இருந்து எப்படியாவது வெளியே கொண்டு வர பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டு வருகிறார். தமிழகத்தில் திமுகவிற்கு இவர் தேர்தல் ஆலோசகராக இருக்கிறார் .

    எப்போது நடந்தது

    எப்போது நடந்தது

    கடந்த நவம்பர் மாதம்தான் இவர் அதிகாரபூர்வமாக திமுகவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கு முன்பே அக்டோபர் மாதமே அதிகாரபூர்வமற்ற முறையில் பிரசாந்த் கிஷோர் திமுகவிற்காக திட்டங்களை வகுத்து வந்தார். அதில் திருப்தி அடைந்த திமுக தலைவர் ஸ்டாலின் திமுகவிற்காக இவரை நேரில் அழைத்து இருக்கிறார்.

    என்ன டெஸ்ட்

    என்ன டெஸ்ட்

    அதன்பின் பிரசாந்த் கிஷோரும் திமுகவிற்காக பணியாற்ற ஒப்புக்கொண்டார். இப்படி ஒரு மாஸ்டர் மைண்ட் திமுகவிற்காக வந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. திமுக இதன் மூலம் தமிழக சட்டசபை தேர்தலுக்கு தயாராகிவிட்டது என்று கூறினார்கள். இவரின் செயல்பாட்டை உள்ளாட்சி தேர்தல் மூலம் திமுக டெஸ்ட் செய்ய உள்ளது.

    எப்படி

    எப்படி

    உள்ளாட்சி தேர்தலில் எங்கெல்லாம் போட்டியிட வேண்டும், எப்படி வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று இவர்தான் நிறைய கண்டிசன்களை போட்டுள்ளார். கட்சியை எப்படி தயார் செய்ய வேண்டும். ஆளும் கட்சியின் பெரிய கூட்டணியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கியுள்ளார். இவர் சொன்னதை எல்லாம் ஸ்டாலினும் செய்துள்ளார்.

    2 மாதம்

    2 மாதம்

    2 மாதமாக திமுக செய்த கோலம் போராட்டம் தொடங்கி எல்லாமே பிகே கொடுத்த ஐடியாதான். அதனால் இவரின் 2 மாத செயல்பாடு குறித்து உள்ளாட்சி தேர்தல் முடிவிற்கு பின் திமுக ஆலோசனை செய்ய உள்ளது. தேர்தல் முடிவு வந்த பின் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உடன் பிகேவின் ஒப்பந்தம் குறித்து ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார்.

    என்ன செய்யலாம்

    என்ன செய்யலாம்

    பிகே உடன் ஒப்பந்தத்தை தொடரலாமா, அவரின் அரசியல் திமுகவிற்கும், தமிழகத்திற்கும் பயன் அளிக்குமா என்று ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளனர். ஒருவகையில் உள்ளாட்சி தேர்தல் முடிவு பிரசாந்த் கிஷோருக்கு திமுக வைத்த பப்ளிக் எக்ஸாம் என்றுதான் கூறுகிறார். அதில் அவர் பாஸ் செய்வாரா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

    English summary
    Tamilnadu Local Body elections is a litmus test for Prashant Kishor agreement with DMK .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X