சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா: தமிழகத்தில் 8 நாட்களுக்கான 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தாக்குதலை தடுக்க தமிழகத்தில் இன்று மாலை முதல் 8 நாட்களுக்கான 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இத்தடை உத்தரவை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு அறிவுறுத்தி உள்ளது.

Recommended Video

    லாக் டவுன் விதிகள் என்ன? எந்த சேவைகள் இயங்கும்?

    தமிழகத்தில் கொரோனா தாக்குதல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் பரவாமல் தடுக்க இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவு ஏப்ரல் 1-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    144 தடை உத்தரவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

    TN Lock Down: What all will be available, what will not?

    • எந்த ஒரு இடத்திலும் 5 பேருக்கு மேல் ஒன்று கூட கூடாது
    • அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்
    • அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் எதுவும் இயங்காது
    • தேநீர் கடை உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் 5 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
    • அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளும் மூடப்படும்.
    • அரசு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே மார்ச் 31-ந் தேதி வரை பணியாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
    • அனைத்து இடங்களிலும் அம்மா உணவகங்கள், ஆவின் பால் விற்பனை நிலையங்கள் இயங்கும்.
    • மளிகை கடைகள், உணவகங்கள் செயல்படலாம். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை.
    • பால், கால்நடை தீவனங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்லலாம்
    • அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையை தவிர்த்த பிற வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
    • அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வ்வைக்கப்படுகிறது.

    144 தடை உத்தரவை அமல்படுத்த அனைத்து சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையில்லாமல் சாலைகளில் நடமாடுவோர் கண்காணிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    TN Lock Down: What all will be available, what will not?
    English summary
    Here the details of TamilNadu Lock Down.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X