சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா?.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் இதுதான்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? எனபதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25,000-ஐ கடந்து அச்சறுத்தி வருகிறது. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் பயிற்சி மருத்துவர்களுக்கு உடனடி வேலை.. ரூ.40000 சம்பளம்.. சென்னை மாநகராட்சி அழைப்புசென்னையில் பயிற்சி மருத்துவர்களுக்கு உடனடி வேலை.. ரூ.40000 சம்பளம்.. சென்னை மாநகராட்சி அழைப்பு

அடங்காமல் திரியும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு ரத்து

10-ம் வகுப்பு தேர்வு ரத்து

கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு

பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு

மே 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறவிருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை கடந்த அ.தி.மு.க அரசு ஒத்தி வைத்தது. ஆனால் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடந்தன. தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளதால் பிளஸ் 2 தேர்வு எப்போது நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமைச்சர் ஆலோசனை

அமைச்சர் ஆலோசனை

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகள், கல்வி நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இது தொடர்பாக இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

தேர்வு எப்போது நடக்கும்?

தேர்வு எப்போது நடக்கும்?

கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், பெற்றோர் ஆசியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ' கொரோனா தொற்று காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுமே தவிர ஒரு போதும் ரத்து செய்யப்படாது. பிளஸ் 2 தேர்வு நிச்சயம் நடைபெறும். தேர்வு எப்போது நடத்துவது? எப்படி நடத்துவது? என்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்' என்று கூறினார்.

English summary
When will the Plus 2 general election be held in Tamil Nadu? Education Minister Anbil Mahesh has given a false explanation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X