சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க கிட்டயும் கோட் இருக்கு.. நாங்களும் போடுவோம்.. பாரீனும் போவோம்.. அடுத்து திண்டுக்கல்லார்!

இந்தோனேஷியாவுக்கு சென்றுள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : TN CM Edapadi palanisamy wears Suit in his foreign Trip

    சென்னை: இந்த வாரம் தலைவர்கள் எல்லாம் வெளிநாடு செல்லும் வாரம் போல இருக்கு.. திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியா கிளம்பி சென்றுள்ளார்.

    வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் எந்த பேச்சாக இருந்தாலும் சரி, கருத்தாக இருந்தாலும் சரி அது வைரலாகி விடும்.

    உளறல் மன்னன், சர்ச்சை புகழ்.. என்ற பட்டப்பெயர்களுக்குள் திண்டுக்கல் சீனிவாசனும் அடக்கம்தான். அந்த அளவுக்கு மக்களிடம் எதையாவது பேசி மாட்டி கொள்வது என்பது இயல்பாகி விட்டது. ஒரு கட்டத்தில் திண்டுக்கல்லார் "இப்படி" பேசினால்தான் ஆச்சரியம் என்ற ரேஞ்சுக்கும் பதிந்துள்ளார்.

    வருகிறது அடுத்த வாரிசு.. தனது மகனையும் களம் இறக்கும் முதல்வர் எடப்பாடி.. பரபரக்கும் அதிமுகவருகிறது அடுத்த வாரிசு.. தனது மகனையும் களம் இறக்கும் முதல்வர் எடப்பாடி.. பரபரக்கும் அதிமுக

    வெள்ளந்தி

    வெள்ளந்தி

    ஆனால் உண்மையிலேயே திண்டுக்கல்லார் ஒரு நல்ல மனிதன். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி, ஒரு மூத்த அரசியல் தலைவர். மனசில் ஒரு களங்கமுமில்லாமல் அப்படி அப்படியே வெளிப்படையாகவும், மறந்து போயும் பேசிவிடுவார். இதை கட்சி சார்பில் மற்றவர்களும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் சிரித்து விட்டுவிடுவார்கள். காரணம், எதையும் உள்நோக்கத்துடனும், சர்ச்சை தேவை என்பதற்காகவோ பேசமாட்டார். வெள்ளந்தி பேச்சுதான் என்றாலும், இவர் வாயை திறந்தாலே அது வைரலாகி விடும் அளவுக்கும் சென்றுவிடுகிறது.

    தாய்லாந்து

    தாய்லாந்து

    இப்போது, விஷயம் என்னவென்றால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து இவரும் வெளிநாடு கிளம்பி சென்றுள்ளார். இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அந்நாடுகளில் வன உயிரின பூங்காக்கள், சரணாலயங்கள் ஆகியவற்றை பார்வையிட உள்ளார். அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள், காட்டுத்தீ தடுப்பு முறைகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சரணாலயங்கள்

    சரணாலயங்கள்

    அரசு முறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். அப்படியே சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் செல்ல உள்ளார். அந்த நாடுகளில் உள்ள சரணாலயங்கள், வன உயிரின பூங்காக்களை பார்வையிடுகிறார். முக்கியமாக, அந்த நாடுகளில் காட்டுத்தீ ஏற்பட்டால் அதை அணைப்பதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்கப்படும், வனத்துறையினர் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, நம்ம ஊரிலும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார் அமைச்சர்.

    கோட்- சூட்

    கோட்- சூட்

    ஒரு பக்கம் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் லண்டனுக்கும், இன்னொரு பக்கம் திண்டுக்கல்லார் இந்தோனேஷியாவுக்கும் என்று கலக்குகிறார்கள். முதல்வர் நேற்று லண்டனில் கோட்-சூட் போட்ட போட்டோ படு வைரலானது. ஒருவேளை வெளிநாட்டுக்கு போயுள்ள திண்டுக்கல்லாரும் கோட்-சூட் போட்டு கெட்-அப் சேஞ்சுக்கு மாறுவாரா என தெரியவில்லை. கலக்கலான திண்டுக்கல்லாரை பார்க்க ஆர்வமாகத்தான் இருக்கிறது!

    வெளிநாடு

    வெளிநாடு

    இப்படி தங்களது அமைச்சர்மார்கள் கோட் சூட்களில் கலக்கி வருவதைப் பார்த்து.. பாருங்கய்யா.. எங்காளுகளை.. கோட்டு சூட்டுல கலக்குறாங்கய்யா.. வெளிநாட்டுக்காரன் கிட்ட நல்லா பழகிட்டு வாங்கய்யா என்று சாலமன் பாப்பையா ரேஞ்சுக்கு ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவினர்.

    English summary
    TN Forest dept Minister Dindigul Srinivasan visit to Indonesia, Singapore, and Thailand
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X