சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சைக்கிளோ.. ஏரோப்பிளேனோ.. எதையும் விடுவதில்லை நம்ம ஜெயக்குமார்... இங்க என்ன பண்றார் பாருங்க!

உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    எதையும் விடுவதில்லை நம்ம ஜெயக்குமார்... இங்க என்ன பண்றார் பாருங்க!

    சென்னை: கண்ணில் எது பட்டாலும் சரி.. அதை ஒரு கை பார்த்துவிடுவதுதான் அமைச்சர் ஜெயக்குமாரின் பாணியே.. அது ஏரோபிளேனாக இருந்தாலும் சரி, சைக்கிள் ஆக இருந்தாலும் சரி!

    எப்பவுமே அமைச்சர் ஜெயக்குமார் எதையாவது வித்தியாசமாக செய்து கொண்டிருப்பார். திடீரென்று பாடுவார், திடீரென்று கவிதை எழுதுவார், தடாலடியான ஒரு சிங்ககுட்டியை தூக்கி வைத்து கொஞ்சுவார்..

    TN Minister Jayakumar opened Physical training Gym in Chennai

    இப்படி பல அம்சங்களை அவ்வப்போது வெளியே தெறிக்கவிடுவார். அதுபோலதான், சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில், உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஆளில்லா விமானம் எனப்படும் டிரோன் டாக்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    அபிநந்தனை கிண்டல் செய்வதா.. மீடியாக்களுக்கு கடிவாளம் போட்ட பாகிஸ்தான் அரசு!அபிநந்தனை கிண்டல் செய்வதா.. மீடியாக்களுக்கு கடிவாளம் போட்ட பாகிஸ்தான் அரசு!

    அதில் ஆர்வமுடன் ஏறி உட்கார்ந்து கொண்ட ஜெயக்குமார். அதன் கதவையும் சாத்தி கொண்டார். பிறகு அந்த விமானத்தை சுற்றுமுற்றும் பார்த்து, விமானம் தயாரிக்கப்பட்ட விதத்தை அங்கிருந்தோரிடம் கேட்டறிந்தார். அப்போதுதான் அது நடிகர் அஜீத் தயாரித்தது என்று தெரியவந்தது. உடனே அமைச்சர், "அஜீத் என்ன இவ்வளவு திறமைசாலியா இருக்கிறாரே" என்று ஆச்சரியப்பட்டார்.

    இதுபோலவே ஒரு சம்பவம்தான் இன்று நடந்துள்ளது. சென்னை சாந்தோமில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன ஜிம் ஒன்றினை ஜெயக்குமார் திறந்துவைத்தார். ரிப்பன் கட் பண்ணிட்டு உள்ளே வந்தவர், ஜிம்மை சுற்றி பார்த்தார். பிறகு திடீரென அங்கிருந்த சைக்கிள் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு சைக்கிளிங் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

    இதனை மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜன், ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் தென்சென்னை எம்பியுமான ஜெயவர்தன் சிரித்தவாறு ரசித்து கொண்டே பார்த்தனர். அருகில் இருந்தவர்கள் ஜெயக்குமாரிடம் ஏதோ கேள்வி கேட்க, அதற்கு சைக்கிளிங் செய்து கொண்டே பதில் அளித்து கொண்டிருந்தார்.

    English summary
    Minister Jayakumar opened physical training gym in Santhom and did exercises
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X