• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

போஸ்டிங் கேட்டு வராதீங்க... அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒட்டிய போஸ்டர்.. செம்ம வைரல்

|

சென்னை: டிரான்ஸ்பர் கேட்டு என்னை நேரில் அணுக வேண்டாம், எல்லாம் வெளிப்படையாக நேர்மையாக நடைபெறுகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது அலுவலகத்தின் முகப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டி உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றது.

கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்! கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

ஆட்சி மாற்றம் நடந்த பின்னர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் கடந்த ஒரு மாதமாக அதிரடியாக நடந்து வருகிறது. பல்வேறு அதிகாரிகள் இதுவரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக வசதிக்காக மிகவும் நேர்மையானவர் என்று பெயர் பெற்ற அதிகாரிகள் முக்கியமான பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்,

சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களின் செயல்பாடுகளை உளவுத்துறைகளால் தீவிரமாக கண்காணித்து வருகிறார். எந்த பிரச்சனையும், சர்ச்சையும் வந்தவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளார். அதேபோல் தான் அமைச்சகர்களும் வெளிப்படையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நிதி பற்றாக்குறை, கொரோனா பெருந்தொற்று காரணமாக எல்லா துறைகளுமே கடும் சவால்களை சந்தித்துள்ளன.

சரியான தேர்வு

சரியான தேர்வு

குறிப்பாக சுகாதாரத்துறை மிகப்பெரிய சவாலை சந்தித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்றால், பெரும் பாதிப்பை தமிழ்நாடு சந்தித்தது. அப்போது யாரை இந்த பொறுப்புக்கு ஸ்டாலின் போடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லாருக்குமே இருந்தது. அந்த பொறுப்பிற்கு மா சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார்,

  மத்திய அரசு விரும்பாவிட்டாலும்.. உண்மையை சொல்லனும்.. தமிழகத்தில் தடுப்பூசி காலி - மா.சு அதிரடி
  அதிரடி செயல்பாடுகள்

  அதிரடி செயல்பாடுகள்

  கடிமான இந்த சூழலை மா சுப்பிரமணியன் சிறப்பாக கையாள்வார் என்று நம்பிக்கையுடன் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பை அளித்தார். அதன்படியே ஆக்டிவ் ஆகசெயல்பட்டு வருகிறார். ஆக்சிசஜன் பற்றாக்குறையை உடனே சரிசெய்தார். கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் படுக்கைகளை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தினார். தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்தினார். இவ்வளவு தான் தடுப்பூசி, எந்த ஊருக்கு எவ்வளவு என்பதையும். மத்திய அரசு கொடுக்கும் தடுப்பூசி அளவையும் வெளிப்படையாக அறிவித்தார். மேலும் முன்கள பணியாளர்களுக்காக செலவு செய்யப்படும் உணவுக்கான தொகைகையும் வெளிப்படையாக அறிவித்தார்.கடந்த ஆட்சியை விட இப்போது தினமும் 30 லட்சம் சேமிக்கப்படுவதாக கூறியிருந்தார்.

  முகத்தில் அறைந்த உண்மை

  முகத்தில் அறைந்த உண்மை

  இப்படி பல்வேறு விஷயங்களில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் மா சுப்பிரமணியன், அவரது அலுவலக வாயிலில் ஓட்டிய போஸ்டர் தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் அலுவலகம் முன்பு உள்ள பதிவு அப்படியே, "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பணியிட மாறுதல்கள் அனைத்தும் வெளிப்படையான (transparency) கலந்தாய்வின் வாயிலாக நடைபெறுவதால் பணியிட மாறுதல் தொடர்பாக, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் அலுவலகத்தை அணுக வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு அமைச்சர் அலுவலகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.இந்த பதிவினை பார்த்த பலரும் இதேபோல் அனைத்து துறைகளும் இயங்கினால் சிறப்பாக இருக்கும் என்று பாராட்டினார்கள்,.

  English summary
  Do not approach me in person asking for a transfer. People's Welfare Minister Ma Subramaniam has posted a notice on the front of his office saying that everything is being done openly and honestly.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X