சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன நடக்கிறது திமுக, அதிமுகவில்? 40 திமுக எம்எல்ஏக்கள் வருவாங்க.. அதிர வைக்கும் அமைச்சர் பேச்சு

40 திமுக எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    என்ன நடக்கிறது திமுக, அதிமுகவில்?- வீடியோ

    சென்னை: நடந்து கொண்டிருப்பதை எல்லாம் பார்த்தால், ஆட்சிக் கவிழ்ப்பு நடக்குமா, நடக்காதா? திமுக எதையாவது செய்து மெஜாரிட்டியை நிரூபிக்குமா? அல்லது எடப்பாடி அரசின் தலை தப்பித்து தொடர்ந்து ஆட்சி நடக்குமா என தெரியவில்லை!

    ஒரு பக்கம் சபாநாயகர் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதும், அதற்கு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திமுக மனு அளிப்பதும் என சட்டப்பூர்வ, முறையான நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

    ஆனால் இன்னொரு பக்கம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்ற பேச்சு திரைமறைவில் உலா வருகிறது.

    எடப்பாடி ஆட்சிக்கு... மே 19ம் தேதி கடைசி மணி அடிக்க தயாராகுங்கள்... ஸ்டாலின் சொல்கிறார் எடப்பாடி ஆட்சிக்கு... மே 19ம் தேதி கடைசி மணி அடிக்க தயாராகுங்கள்... ஸ்டாலின் சொல்கிறார்

    7 பேர் அதிமுக பக்கம்

    7 பேர் அதிமுக பக்கம்

    மே 23-க்கு பிறகு எப்படியாவது ஆட்சியை பிடிக்க முடிவு செய்துள்ள திமுக 7 முதல் 10 அதிமுக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி வருவதாகவும், அதில் 7 பேர் திமுக பக்கம் சாய தயார் என்றும் சொல்லப்பட்டது. அதே சமயம் அந்த எம்எல்ஏக்கள் திமுக ஆதரவு அளிக்கும் பட்சத்தில், அவர்களது பதவி பறிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளையும் அக்கட்சி எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

    ராஜேந்திர பாலாஜி

    ராஜேந்திர பாலாஜி

    ஆனால் இப்போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்ன சொல்கிறார் என்றால், "அவங்களுக்கு 4 அதிமுக எம்எல்ஏ..ன்னா, எங்களுக்கு 40 திமுக எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று திருப்பி போட்டு ஜர்க் தந்துள்ளார். ஒட்டப்பிடாரம் அரசரடி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் நினைச்சா, அதிலயும் எடப்பாடியார் நினைச்சால், 40 திமுக எம்எல்ஏக்கள் எங்களிடத்தில் வர தயாராக இருக்காங்க. நாங்க சொல்லவே வேணாம். பணம் தர வேணாம், காசு தர வேணாம். எடப்பாடி சொன்னால் போதும். இங்க வந்துடுவாங்க.

    எம்எல்ஏக்கள்

    எம்எல்ஏக்கள்

    அதனால அந்தக் கூட்டம் எப்ப வேணும்னாலும் அதிமுகவுக்கு வரலாம். அதனால எங்க கிட்ட இருக்கிற 4 எம்எல்ஏக்களை பத்தி பேசினால், நாங்க அங்க இருக்கிற 40 எம்எல்ஏக்களை பற்றி நினைச்சு பார்க்கணும். எங்க மீது கல்லெறிஞ்சா, அவர் மீது கல்லெறிய நிறைய கற்கள் தயாரா இருக்கு" என்று சவால், சவடால் கலந்து தெறிக்க விட்டுள்ளார் ராஜேந்திர பாலாஜி!

    தமிழக அமைச்சர்

    தமிழக அமைச்சர்

    அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் விலை பேசப்படுவதாக திமுக தரப்பில் வந்து கொண்டிருக்கும் ரகசிய தகவல்களும், எங்க பக்கம்தான் 40 திமுக எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரு தமிழக அமைச்சரின் நேரடியான பேட்டியும் பெரும் அதிர்ச்சியைதான் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது சும்மனாச்சுக்கும் பேசும் பேச்சு போலவும் தெரிகிறது. திமுக தரப்பிலிருந்து இத்தனை பேர் தாவுவார்கள் என்று அமைச்சர் கூறுவதை நம்ப முடியவில்லை. அதேசமயம், நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

    டோட்டல் சேஞ்ச்

    டோட்டல் சேஞ்ச்

    ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தமிழக அரசியல் டோட்டலாக மாறி விட்டது, நாறி விட்டது. எம்எல்ஏக்கள் யார், யார்கிட்ட இருக்காங்க? யார் யார் பக்கம் இருக்காங்க? யார் யாரிடம் சாய போறாங்க? என்றெல்லாம் கூறவே முடிவதில்லை. என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில்தான் தமிழக அரசியல் தாறுமாறாக போய்க் கொண்டிருக்கிறது.

    நம்பிக்கை இல்லை

    நம்பிக்கை இல்லை

    இரு தரப்பு பேச்சுக்களையும் நாம் கவனித்தால், நாளைக்கு ஒருவேளை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால்கூட அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு போய் கொண்டிருக்கிறது.

    English summary
    Minister Rajendra Balaji says, "40 DMK MLAs are ready to support AIADMK" in Ottapidaram Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X