சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாதிக்கொரு டிஎன்ஏ இருக்கு.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சால் சலசலப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    சாதிக்கொரு டிஎன்ஏ இருக்கு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்-வீடியோ

    சென்னை : ஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ள கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் நடத்தப்பட்ட கருத்தரங்கம் ஒன்றில் தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாடார் சமூகம் ஆன்மிகம் மற்றும் வணிகம் ஆகியவற்றில் தனித்தன்மை கொண்டது என்றார்.

    TN minister says every caste has its own DNA

    வெல்லம் உற்பத்தி, கழுதைகள் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று வணிகம் செய்வது ஆகியவை நாடார் சமூகத்தினரிடையே காணப்பட்ட தனித்த அடையாளங்கள் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

    ஷிவ நாடார் அத்தகைய வணிகத் திறமை மூலம் இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனத்தை நிறுவியதை சுட்டிக்காடிய அவர், ஒவ்வொரு மனிதருக்கும் டிஎன்ஏ உள்ளது போல், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது என்றார்.

    அந்த மரபணுவில் குறிப்பிட்ட சமுதாயத்தின் அடையாளம் இருக்கும் என்பதோடு, பரம்பரை பரம்பரையாக அந்த அடையாளம் ரத்தத்தில் ஊறி இருக்கும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

    சாதிப் பற்று இருப்பதில் தவறு கிடையாது. சாதி வெறி இருக்கக் கூடாது. மற்றொரு சாதியை வேரறுப்போம் என்ற எண்ணம் கொண்டிருக்கக் கூடாது. மற்ற சாதிகளும் வளர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

    தமிழக சட்டசபையில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த 13 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். ஆனால் இதற்கு முன்பு, 25 எம்எல்ஏக்கள் இருந்தனர். அந்த எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்துவிட்டது. இந்த நிலைமை மாற வேண்டும் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

    English summary
    Tamil Nadu minister Mafoi Pandiyarajan has said that every caste has its own DNA in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X