சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.. அமைச்சர் ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுகவை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.. அமைச்சர் ஜெயக்குமார்-வீடியோ

    மகாபலிபுரம்: பிரிவினை வாதத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திமுகவை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடினார்.

    கல்வி அலுவலர்களுக்கு 3 நாள் நிர்வாகப் பயிற்சி தொடக்க விழா சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கியது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், இறையன்பு ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் .

    நளினி பரோல் நீட்டிப்பது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அரசு முடிவு செய்யும் என்று கூறினார்.

    தண்ணீர் பீய்ச்சியடிக்குமாம்... கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்.. டாய்லெட்டில் கசமுசா செய்தால்! தண்ணீர் பீய்ச்சியடிக்குமாம்... கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்.. டாய்லெட்டில் கசமுசா செய்தால்!

    அனைவரின் நலன் முக்கியம்

    அனைவரின் நலன் முக்கியம்

    ஆவின் பால் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே பலமுறை விளக்கம் அளித்துவிட்டோம். பால் உற்பத்தியாளர்கள் கேட்டதன் அடிப்படையில் தான் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அனைவரின் நலனை கருத்தில் கொண்டு தான் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

    அமைச்சர் ஜெயக்குமார்

    அமைச்சர் ஜெயக்குமார்

    காஷ்மீர் விவகாரத்தில் திமுக டெல்லியில் போராட்டம் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,
    ஏற்கனவே திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயக்குமார் தேசிய ஒருமைப்பாடு விவகாரத்தில் கருத்து சொல்லி அது வைரலாகியது. இந்தியாவின் ஒரு பகுதி காஷ்மீர் இல்லை என்று சொல்கிற போது நாளை தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று சொல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்த கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் திமுகவை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.

    திமுக ஆதரிக்கிறதா

    திமுக ஆதரிக்கிறதா

    பிரிவினை வாதத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரத்தில் வழக்கறிஞர் சரவணணின் கருத்துக்கு இதுவரை ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை. அப்படி என்றால் அவர்கள் பிரிவினை வாதத்தை ஆதரிக்கிறார்களா? காஷ்மீருக்கான 370வது நீக்கத்தை ஒட்டுமொத்தமாக பாராட்டுகிறார்கள். உலகம் முழுவதும் பாராட்டுகிறார்கள். ஆனால் திமுக எதிர்க்கிறது. உலகில் அனைத்து இடத்திலும் திமுகவிற்கு சொத்து உள்ளது, காஷ்மீரில் சொத்து வாங்க திமுக விற்கு வசதியாகிவிட்டது என்றார்.

    விபி துரைசாமி கருத்துக்கு பதில்

    விபி துரைசாமி கருத்துக்கு பதில்

    உள்ளாட்சி தேர்தல் குறித்த கேள்விக்கு உள்ளாட்சி தேர்தலை அதிமுக தள்ளிப்போடவில்லை. திமுகதான் வழக்கு போட்டது தான் பிரச்சனைக்கு காரணம். தேர்தல் அக்டோபரில் நடத்தப்பட உள்ளது. வி.பி.துரைசாமி கருத்திற்கு...எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா தான் எங்கள் குரு என்றும் அனைவருக்குமே குரு எம்.ஜி.ஆர் தான் என்றும் வி.பி.துரைசாமி அனைத்தையும் மறந்து துரோகம் செய்வது ஏற்கமுடியாது என்று கூறினார்.

    English summary
    TN Minster jayakumar asked central government should ban dmk party over this party opposes kashmir 370 issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X