சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 8-வது இடத்துக்கு நகர்ந்தது தமிழகம்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 8-வது இடத்துக்கு நகர்ந்திருக்கிறது தமிழகம்.

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் 2-வது இடத்தில் இருந்து வந்தது தமிழகம். ஆனால் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பொதுவாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

TN moves 8th Place in Coronavirus Active Cases

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவேகமாக குறைந்திருக்கிறது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,164 பேர் மட்டுமே. இது இந்திய அளவில் 8-வது இடம்.

தமிழகத்தைவிட மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், டெல்லி, ஆந்ந்திரா, உத்தரப்பிரதேசத்தில் கொரோனஅவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,78,406. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,24,522 ஆக இருக்கிறது. இது இந்திய அளவில் 4-வது இடம்.

கொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு கொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கொரோனா மரணங்களில் 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. கொரோனா மரணங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் 2-வதாக கர்நாடகாவும் உள்ளன. மகாராஷ்டிராவில் 43,911, கர்நாடகாவில் 11,168, தமிழகத்தில் 11,122 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

English summary
TN moves 8th Place in Coronavirus Active Cases compare with other states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X