சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷாவுக்கு எதிராக அடங்கிப் போன தமிழக எதிர்க்கட்சிகள்... காணாமல் போன ‘goback' கோஷம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit Shah Plan : ஓபிஎஸ் -சை வைத்து அமித்ஷா போடும் திட்டம்!- வீடியோ

    சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவின் தமிழக வருகையின் போது எந்த ஒரு எதிர்க்கட்சியும் எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல் அமைதி காக்கும் அளவுக்கு அடங்கிப் போயிருந்தன.

    பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்தாலே எதிர்ப்பு தெரிவித்து goback ஹேஷ்டேக்குகளை சர்வதேச அளவில் ட்ரெண்டிங்காக்கிவிடுகின்றன தமிழக எதிர்க்கட்சிகள். அத்துடன் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு கருப்பு பலூன்களை பறக்கவிட்டன.

    பிரதமர் மோடியை தரைவழியே செல்லவிடாமல் தடுத்த பெருமை எங்களுக்கே என ஒவ்வொரு எதிர்க்கட்சியும் மார்தட்டின. லோக்சபா தேர்தலின் போதும் பாஜகவுக்கு எதிராக உச்சகட்ட பிரசாரம் தமிழகத்தில்தான் நடைபெற்றது.

    குற்றாலத்தில் திமுதிமுவென கொட்டும் தண்ணீர்.. ஆர்ப்பரிக்கும் அருவிகள்.. மக்கள் கூட்டம் செம!குற்றாலத்தில் திமுதிமுவென கொட்டும் தண்ணீர்.. ஆர்ப்பரிக்கும் அருவிகள்.. மக்கள் கூட்டம் செம!

    மென்மை இந்துத்துவா முழக்கம்

    மென்மை இந்துத்துவா முழக்கம்

    மேற்கு வங்கத்தில் கூட பாஜகவின் ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கத்துக்கு பதிலாக ஜெய் காளி என்கிற மென்மை இந்துத்துவா முழக்கம்தான் முன்வைக்கப்பட்டது. தமிழகத்தில்தான் அக்மார்க் பாஜக எதிர்ப்பு பேச்சுகள் வீதியெங்கும் எதிரொலித்தன.

    பாஜக மசோதாக்களுக்கு ஆதரவு

    பாஜக மசோதாக்களுக்கு ஆதரவு

    இத்தனை காட்சிகளும் மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும்வரைதான்.. அவ்வளவுதான் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முழக்கம் எங்கே போனது என தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் பாஜகவை கடுமையாக எதிர்க்கிறோம் என பேசிக் காட்டிய தமிழக கட்சிகள், போட்டி போட்டுக் கொண்டு மசோதாக்களுக்கு இருசபைகளிலும் ஆதரவை வெளிப்படுத்தின.

    காங். மீது வைகோ பாய்ச்சல்

    காங். மீது வைகோ பாய்ச்சல்

    ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது பாஜகவை விட காங்கிரஸைத்தான் ராஜ்யசபாவில் வைகோ கடுமையாக விமர்சித்தார். இதனால் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வைகோவை பச்சோந்தி முதல் பல்வகையான விமர்சனப் பட்டங்களை சூட்டி வருகின்றனர்.

    எந்த எதிர்ப்பும் இல்லை

    எந்த எதிர்ப்பும் இல்லை

    இந்நிலையில் சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்றார். அதேநேரத்தில் தமிழகத்தில் மத்திய அரசுக்கோ, பாஜகவுக்கோ எதிராக எந்த ஒரு எதிர்ப்பு முழக்கமும் இடம்பெறவில்லை.

    அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சிகள்

    அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சிகள்

    கட்சிகளையே காணாமல் போகச் செய்யும் போக்கை பாஜக கடைபிடித்து வருகிறது; இன்னொரு பக்கம் மத்திய அரசு மூலம் தனிநபர்களை பயங்கரவாதிகளாகவும் அறிவிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் வெலவெலத்துப் போய் கிடக்கின்றன.

    பம்மிய எதிர்க்கட்சிகள்

    பம்மிய எதிர்க்கட்சிகள்

    இதனால்தானோ என்னவோ இம்முறை goback ஹேஷ்டேக்குகள், கருப்பு பலூன்கள் எதுவும் இல்லை.. அவ்வளவு அடக்கமாகவே தமிழக எதிர்க்கட்சிகள் பம்மிக் கொண்டிருந்தன.

    English summary
    Tamilnau Political Parties had dropped their Goback slogan against BJP National President and Union Home Minister Amit Shah.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X