சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முன்னாடி சிரிக்கிறாங்கே.. பின்னாடி 'ஆப்போடு' அலையறாங்கே.. என்னாக போகுதோ.. கலக்கத்தில் வேட்பாளர்கள்

உட்கட்சி பூசல்களில் தமிழக அரசியல் கட்சிகள் இன்று சிக்கி தவிக்கிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections 2019: தேர்தல் களேபரங்கள்... கூட்டணி முதல் பிரச்சாரம் வரை- வீடியோ

    சென்னை: "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே", "நீங்கள் செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா" என்ற குரல்கள் ஒலிக்காத தேர்தல் இது! இதனால்தானோ என்னவோ ஏகப்பட்ட பிரச்சனைகள், அமர்க்களங்கள், சர்ச்சைகள், விவாதங்கள் என தமிழக அரசியலே ததிங்கினத்தோம் போட்டு வருகிறது.

    இந்த முறை தேர்தலை எடுத்து கொண்டால், கூட்டணி விஷயம் முதல் பிரச்சாரம் வரை எல்லாமே களேபரங்களாக உள்ளன.

    எந்த கூட்டணி கட்சிக்குமே கேட்ட தொகுதிகள் முழுமையாக கிடைக்கவில்லை. எந்த கூட்டணி கட்சிக்குமே வேட்பாளர்கள் திருப்திகரமாக அமையவில்லை. எந்த கூட்டணி கட்சிக்குமே தேர்தல் பணம் தாராளமாக இல்லை.

    எல்லைத் தாண்டியதாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது... இலங்கை கடற்படை நடவடிக்கை எல்லைத் தாண்டியதாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது... இலங்கை கடற்படை நடவடிக்கை

    விபரீதங்கள்

    விபரீதங்கள்

    அதிமுக கோட்டை எனப்படும் இடங்களில் பாமகவும், திமுக எளிதில் வெற்றிபெறும் இடங்களில் காங்கிரசும் களம் காண போகின்றன. இதற்கெல்லாம் காரணம் பிரதான கட்சிகளின் திமுக, அதிமுக கோஷ்டி சண்டைகள்தான். நாளைக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகி கூட்டணி கட்சிகள் அங்கு தோற்று போனால்தான் நிலைமை விபரீதமாகி போகும்.

    செலவுக்கு பணம்

    செலவுக்கு பணம்

    இதற்கு உதாரணம் திண்டுக்கல்லில் பாமக, திருச்சியில் காங்கிரஸ் என்று பட்டியல் நீள்கிறது. இதைவிட பரிதாபம் தேமுதிக வேட்பாளர்களுக்கு தொகுதியில் செலவு செய்ய பணம் இல்லை என்பதும், அதை கூட்டணி கட்சிகள் யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பதும்தான்.

    சின்னம்

    சின்னம்

    இதனிடையே சின்னம் பிரச்சனை பெரும் பிரச்சனையாகிவிட்டது. கட்சி சின்னமும் கிடைக்காமல், கேட்ட சின்னமும் கிடைக்காமல், கிடைக்கிற சின்னத்தை வைத்து மலங்க மலங்கி விழிக்கும் கட்சி தலைவர்கள் அதிகம்! அதிலும் ஒரே மாசத்தில் இந்த சின்னத்தை மக்களிடம் பிரபலப்படுத்தி, அதை வாக்குகளாக மாற்றுவது என்பது கற்பனைகூட பண்ண முடியாத விஷயம் ஆகும்!

    ரிஸ்க்

    ரிஸ்க்

    ஒரு கட்சிக்கு எந்த பகுதியில் பலம் அதிகமோ, எந்த வேட்பாளருக்கு செல்வாக்கு அதிகமோ அவர்களைதான் அங்கு போட்டியிட அனுமதிப்பது என்பது காலங்காலமாக நடக்கும் வழக்கமான சமாச்சாரம் ஆகும். இந்த சாதாரண சமாச்சாரம்கூட இந்த முறை நடக்காமல், முதல்முறையாக திமுக, அதிமுகவும் ரிஸ்க் எடுத்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.

    பாஷை-ராஜா

    பாஷை-ராஜா

    இது போக, கட்சி தாவல்கள், சரமாரி விமர்சனங்கள், தாறுமாறு குற்றச்சாட்டுகள், பிரச்சார காமெடிகள், என்று தமிழகமே மிரண்டுள்ளது. ஒரு கட்சியில் "சின்னத்தையே மாற்றி ஓட்டு கேட்கிறார்கள், இன்னொரு கட்சியில் "இந்த பெண் வேட்பாளர் அழகாக இருக்கிறார், ஓட்டுப் போடுங்கள்" என்று பிரச்சாரம் செய்கிறார். இன்னொருத்தர் என் மகனுக்கு இங்கிலீஷ் தெரியுமே என்கிறார். இன்னொருவரோ எங்க அம்மாவுக்கு பிறகு நிறைய பாஷை பேசுவது இந்த ராஜாதான் என்று ஐஸ் வைக்கிறார்.

    கோக்கு மாக்கு

    கோக்கு மாக்கு

    பெண் வேட்பாளர் அழகாக இருந்தால் போதுமா? அல்லது பெண் என்றாலே அழகு ஒன்றுதான் ஆண்கள் கண்ணை உறுத்துகிறதா? வேற சொல்லி கொள்ளும் விஷயமே அந்த வேட்பாளரிடம் இல்லையா? இது அழகி போட்டியா, தேர்தலா என்பதே புரியவில்லை. இப்படி கோக்கு மாக்காகவும், குண்டாங்குறையாகவும் போய்க் கொண்டிருக்கிறது பிரச்சாரம்.

    மக்களுக்கு நல்ல வேடிக்கை.. ஆனால் இதுதானே ஒவ்வொரு தேர்தலிலும் வாடிக்கை!

    English summary
    In this election, TN political parties have been subjected to debate and criticism. The reason is the inner conflict and Local Politics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X