சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்கள்- தமிழக எம்.பிக்கள் இருந்தும் காலி இடமாக அறிவித்ததால் சர்ச்சை

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்கள் குழுவில் தமிழக எம்.பி.க்கல் ஒருவர் கூட நியமிக்கப்படாததும் இன்னொரு சர்ச்சையாக வெடித்துள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி.. பின்னர் எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனாலும் எய்ம்ஸ் வரும் என்று மட்டுமே சொல்லப்பட்டு வந்தது.

எய்ம்ஸ் உறுப்பினர்கள்

எய்ம்ஸ் உறுப்பினர்கள்

இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர், உறுப்பினர்கள் குழுவை மத்திய அரசு அறிவித்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை அடுத்தடுத்து சர்ச்சைகளை கிளப்பிவிட்டிருக்கிறது.

சிறுநீர் டாக்டர் சுப்பையா

சிறுநீர் டாக்டர் சுப்பையா

எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் குழுவில் டாக்டர் சண்முகம் சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி தலைவராக உள்ளார். அத்துடன் சென்னையில் மூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த பிரச்சனையில் சிக்கியவர். இவர் மீது சென்னை போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். இப்படியான ஒருவரை எய்ம்ஸ் மருத்துவமனை குழுவின் உறுப்பினராக நியமிப்பதா? என அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன.

தமிழக எம்பிக்கள் இல்லை

தமிழக எம்பிக்கள் இல்லை

இதனையடுத்து இந்த எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் குழுவில் தமிழக எம்.பி.க்கள் யாருமே நியமிக்கப்படாமல் காலி இடம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் மதுரை மற்றும் அதனை சுற்றிய திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் எம்.பிக்கள் இருக்கின்றனர்.

கார்த்தி சிதம்பரம் கண்டனம்

கார்த்தி சிதம்பரம் கண்டனம்

இப்படி தமிழக எம்.பி.க்கள் இருந்தும் கூட மத்திய அரசு ஏன் காலி இடமாக அறிவித்தது என்பதுதான் கேள்வி. காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறுநீர் சுப்பையா விவகாரத்துடன் தமிழக எம்.பி.க்கள் புறக்கணிப்பும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X