சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர்.. இதுதான் முப்பெருவிழா சபதம்.. ஸ்டாலின் பேச்சு!

Google Oneindia Tamil News

சென்னை: ''எல்லோரும் நம்முடன்'' என்ற உறுப்பினர் சேர்க்கைக்கான முன்னெடுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திமுகவின் முப்பெரும் விழாவில் தொடங்கி வைத்தார். இணையவழி மூலம் எளிதாக உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த முன்னெடுப்பை தொடங்கி வைத்தார்.

2021 சட்டசபை தேர்தலுக்காக திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. அமைப்பு ரீதியாக திமுகவில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடக்கிறது.

செப்டம்பர் 15 - அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 - பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள். இந்த மூன்று முக்கியமான நாட்களை கொண்டாடும் வகையில் திமுக சார்பாக முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

நீட் அச்சத்தால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள திமுகதான் காரணம் - முதல்வர் ஆவேசம்நீட் அச்சத்தால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள திமுகதான் காரணம் - முதல்வர் ஆவேசம்

விருதுகள் வழங்கப்பட்டது

விருதுகள் வழங்கப்பட்டது

இந்த விழாவில் திமுக சார்பாக பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி ‘பெரியார் விருது' மா.மீனாட்சிசுந்தரம், ‘அண்ணா விருது' காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அ.ராமசாமி, ‘கலைஞர் விருது' முன்னாள் எம்எல்ஏ எஸ்.என்.எம். உபயதுல்லா, ‘பாவேந்தர் விருது' முன்னாள் அமைச்சர் ஆ.தமிழரசி, ‘பேராசிரியர் விருது' சுப.ராஜ கோபால் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

மேலும் : ''எல்லோரும் நம்முடன்'' என்ற உறுப்பினர் சேர்க்கைக்கான முன்னெடுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திமுகவின் முப்பெரும் விழாவில் தொடங்கி வைத்தார். இணையவழி மூலம் எளிதாக உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த முன்னெடுப்பை தொடங்கி வைத்தார் திமுகவை நோக்கி இளைஞர்களை கவரும் வகையில் இந்த முன்னெடுப்பை ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

நீட்

நீட்

இதற்காக dmk.in/joindmk என்ற இணைய பக்கத்தை பயன்படுத்துமாறு ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். அதில், நீட் மரணங்கள் தற்கொலை என சொல்ல மாட்டேன்; கொலை என சொல்வேன். முதல்வர் அவர்களே! நீங்கள் என்ன சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் உங்கள் பாட்சா பலிக்காது.

நிதியை பெற்று தாருங்கள்

நிதியை பெற்று தாருங்கள்

நீட் தேர்வை எதிர்க்க முடியவில்லை- இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் தெளிவு இருக்கிறதா?.மாநிலத்துக்கு வந்து சேரக் கூடிய நிதியை பெற முடியுமா? சி.ஏ.ஏ.வை எதிர்த்தீர்களா?.தமிழக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர் - இதுதான் முப்பெருவிழா சபதம்.மத்திய அரசுக்கு அடிபணிந்து கூனிக்குறுகி ஆட்சி செய்துவரும் அ.தி.மு.க ஆட்சியை தூக்கியெறிய மக்கள் தயாராகிவிட்டார்கள். அதையே முப்பெரும் விழாவில் நாமும் சபதமேற்போம், என்று ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
TN people are ready to throw the AIADMK government says DMK chief M K Stalin in the party function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X