சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாங்க.. சீக்கிரமா போய் ஓட்டு போட்டு வந்துடலாம்.. வாக்கு சாவடிகளில் அலை மோதும் மக்கள் கூட்டம்

தமிழக மக்கள் முந்தி சென்று வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

    சென்னை: "வாங்க.. சீக்கிரமா போய் ஓட்டு போட்டு வந்துடலாம்.." என்று வாக்களிக்க தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பிம்பங்களும் இல்லாத நிலையில் இன்று நடக்கும் தேர்தல் இது! அதிருப்திகள் என்று பேசப்பட்டவர்களுடன் கூட்டணி சேர்த்து அரசியல் கட்சிகள் சந்திக்கும் தேர்தல் இது! அதிமுக, திமுக, அமமுகவுக்கு இணையாக மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழரும் இணைந்து பேசப்பட்ட தேர்தல் இது!

    TN People showing their interest to Voting in MP Election today

    லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி.. சேலம், ஈரோட்டில் அதிர்ச்சி! லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி.. சேலம், ஈரோட்டில் அதிர்ச்சி!

    ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள் மீது ஆயிரமாயிரம் விமர்சனங்களை முன்வைத்தாலும், வாக்களிப்பது என்ற ஜனநாயக கடமை வந்துவிட்டால் நம் மக்கள் முந்தி வருகிறார்கள்.

    காலை 7 மணிக்கு வாக்கு பதிவு என்று சொன்னாலும், முன்னதாகவே ஆங்காங்கே கியூவில் நின்றுவிட்டனர். தன் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்ற ஆர்வம், வாக்குச் சாவடிகளில் கூட்டம் சேருவதற்கு முன்னாடியே ஓட்டு போட்டு வந்துவிடலாம் என்ற எண்ணம், வெயிலுக்கு முன்னாடியே ஓட்டை போட்டு வந்துடலாம் என்ற நினைப்பில் நிறைய பேர் ஓட்டு போட விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

    இதனால் மக்கள் தலைகளை ரோட்டில் சுறுசுறுப்பாக காண முடிகிறது. காலையிலேயே மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற நினைப்பது பாராட்டத்தக்கது!

    English summary
    Voting started at 7 am in Tamil Nadu. That is why people are getting ready to vote with enthusiasm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X