சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சில்மிஷம், சீண்டல்.. ஒருத்தரும் வாலாட்ட முடியாது.. ஒட்ட நறுக்க வந்துவிட்டது "பிங்க் கலர்" வண்டி

தமிழக அரசின் பிங்க் நிற அம்மா பெட்ரோல் வாகனம் அறிமுகமாகிறது

Google Oneindia Tamil News

சென்னை: பெண்களிடம் ஆகட்டும், குழந்தைகளிடம் ஆகட்டும்.. அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவே பிங்க் கலரில் ஒரு புதிய ரோந்து வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.

நம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கம், பயத்தை சமீப காலமாக அதிகமாகவே தந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்த அரசு முயன்று வந்தது.

TN Pink Petrol vehicle for women and children

அதன்படி, மாவட்டந்தோறும் இதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கபட்டு மகளிர் ஸ்டேஷனுடன் இணைத்து செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவுக்கு தலைவராக ஏடிஜிபி ரவி இருக்கிறார். இந்த பிரிவுதான், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் சேர்த்து விசாரித்து வருகிறது.

இதை தவிர, மத்திய - மாநில அரசு இணைந்து பிங்க் கலரில் ஒரு ரோந்து வாகனத்தை உருவாக்கி அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ரோந்து வாகனமும் குழந்தைகள், பெண்கள் நலனுக்காகத்தான். அதாவது குழந்தைகளுக்காக 1098 என்ற ஹெல்ப்லைன் எண்ணும், பெண்களுக்காக 1091 என்ற எண்ணும் இந்த வாகனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.

TN Pink Petrol vehicle for women and children

முதற்கட்டமாக சென்னையில் 35 ரோந்து வாகனங்கள் தரப்பட்டுள்ளன. அடுத்த வாரம் இந்த ரோந்து வாகனத்தை ஒப்படைக்க உள்ளது. அவைகளை முதல்வர் பழனிசாமிதான் துவக்கி வைக்க போகிறார். இப்படி பிங்க் நிற வாகன திட்டம் கேரளாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதற்கு அங்கு நல்ல வரவேற்பும் உள்ளது. அதனால்தான் நமக்கும் இப்படி ஒரு ஏற்பாட்டினை அரசு செய்துள்ளது.

குழந்தைகள் பெண்கள் மட்டுமில்லை.. வயசானவர்களுக்கும் இந்த திட்டம் உதவும். பெரிய அளவு கொடூரங்களை நடக்க விடாமல் மட்டுமில்லை.. யாராவது பெண்களை கேலி செய்தாலே போதும்.. அதிரடியாக களத்தில் இறங்கி தடுப்பதுதான் இந்த பிங்க் முக்கிய வேலை. சென்னைக்கு பிறகு மற்ற மாவட்டங்களிலும் படிப்படியாக இந்த பிங்க் வண்டி வர போகிறது என்பதால் பெண்கள், குழந்தைகளுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டு உள்ளது.

English summary
CM Edapadi Palanisamy going to introduce Pink Patrol Vehicle for Ladies and Child against Crimes in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X