சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் மார்க்சிஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக மாறியது.

TN Political parties hold Portest agains CAA

இப்போராட்டத்தில் போலீசாரே வன்முறையில் ஈடுபட்டதாக கூறி நாடு முழுவதும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலரும் ராஜ்யசபா எம்.பியுமான வைகோ, திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பியுமான திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், இடதுசாரி தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

25 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்க்கை.. கேள்விக்குறியான குடியுரிமை.. கருணை கொலை கோரி இலங்கை தமிழர் மனு25 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்க்கை.. கேள்விக்குறியான குடியுரிமை.. கருணை கொலை கோரி இலங்கை தமிழர் மனு

குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் பத்திரிகையாளர்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

English summary
Tamilndu Opposition Parties today hold a protest against the Centre's CAA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X