சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதித்தவர்கள், இதய ஆபரேஷன் செய்தவர்களுக்கு சீட் கொடுக்காமல் விட்டால் என்ன? இப்படி ஒரு ஆலோசனை!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு கட்சியை எப்படியெல்லாம் மேம்படுத்துவது என்பதற்கு படுதீவிரமான ஆலோசனைகள் நடப்பது வழக்கம். ஆனால் ஒரு கட்சி உருப்படவே கூடாது என்பதற்கும் கூட ஆலோசிப்பார்கள் போல.

பொதுவாக சட்டசபை தேர்தல் களத்தில் எப்போதுமே சீனியர்கள் பிளஸ் ஜூனியர்கள் இருப்பதுதான் வழக்கம். அதுவும் கட்சியின் 2-ம் நிலையில் இருப்பவர்களை எல்லாம் அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது.

யார் யாருக்கு சீட்?

யார் யாருக்கு சீட்?

அது கட்சியின் எதிர்காலத்தையே கூட காவு வாங்கிவிடும். ஆகையால் ஒரு கட்சியில் யார் யாருக்கு சீட் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கு பல்வேறு வகையிலான ஆலோசனைகள் மிக மிக அவசியம். இதை எல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் செய்யவும் மாட்டார்கள்.

ஆபரேஷன் செய்தவர்கள்

ஆபரேஷன் செய்தவர்கள்

ஆனால் கட்சி நடத்துவதும் தேர்தல் வருவதுமே பொட்டிகள் பரிமாறத்தான் என்கிற சிந்தனையில் ஊறிப் போனவர்களுக்கு புத்தி எப்படி வேலை செய்யும்? இந்த தேர்தலில் இதய ஆபரேஷன் செய்துட்டீங்க.. அதனால கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க என சில சீனியர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு வேட்டு வைக்க டிசைடிங் கோஷ்டி திட்டமிட்டிருக்கிறதாம்.

கொரோனா பாதிப்பா?

கொரோனா பாதிப்பா?

இதில் கூடுதலாக கொரோனா பாதிப்பு இருந்துச்சு.. அதனால பிரசாரத்துக்கும் வர வேண்டாம்.. அப்புறமா எல்லாத்தையும் பார்த்துக்கலாம்.. வீட்டில் இருந்தபடியே தேர்தல் வேலையை கோ ஆர்டினேட் செய்யலாமே எனவும் தூண்டில் போடுகிறார்களாம்.

எல்லாத்துக்கும் பணமா?

எல்லாத்துக்கும் பணமா?

எப்படியெல்லாம் இருந்த கட்சி இப்படி எதுக்கு எடுத்தாலும் பணம் பணம் என்றே குறிவைத்து குதறிக் கொண்டிருக்கிறார்களே என குமுறுகிறார்களாம் சீனியர்கள். குமரிமுத்து போல சிரிக்கிறார்களாம் பொட்டி திறந்தவர்கள்.

English summary
TN Political party's new strategy for Assembly Election 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X