சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தல் இப்போது இல்லை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    உள்ளாட்சித் தேர்தல் இப்போது இல்லை: தமிழக அரசு பதில்- வீடியோ

    டெல்லி: உள்ளாட்சித் தேர்தல் இப்போது நடத்துவதற்கான சூழல் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதனால் மக்கள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தொடர்பான பிரச்சினைகளை மக்கள் யாரிடம் புகார் தெரிவிப்பது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி மதுரையை சேர்ந்த கே கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

     உ.பி,யில் 5-ம் கட்ட வாக்குப் பதிவை எதிர்கொள்ளும் 12 தொகுதிகளில் 7-ல் பாஜகவுக்கு அக்னி பரீட்சை உ.பி,யில் 5-ம் கட்ட வாக்குப் பதிவை எதிர்கொள்ளும் 12 தொகுதிகளில் 7-ல் பாஜகவுக்கு அக்னி பரீட்சை

    வார்டு வரையறை

    வார்டு வரையறை

    அந்த மனு மீது மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதில் அளித்தது. அதில் வார்டு வரையறை பணி முடியும் தருவாயில் உள்ளது என பதில் அளித்திருந்தது.

    4 தொகுதிகளுக்கு

    4 தொகுதிகளுக்கு

    இந்த நிலையில் இந்த வழக்கில் இன்றைய தினம் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் மக்களவை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. 22 தொகுதி மாநில சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளுக்கு மட்டும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

    3 மாத அவகாசம்

    3 மாத அவகாசம்

    ஏனைய 18 தொகுதிகளுக்கு மக்களவை தொகுதியுடன் நடைபெற்றுவிட்டது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த சாத்தியமில்லை. எனவே மாநில தேர்தல் ஆணையம் விடுத்துள்ள கோரிக்கைபடி 3 மாத காலஅவகாசம் அளிக்கலாம்.

    விசாரணை

    விசாரணை

    எனவே இந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது. மாறாக மாநில தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை சுப்ரீம் கோர்ட் கேட்டு பெறலாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் மே 10-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெறும்.

    English summary
    Tamilnadu replies in Supreme Court that there could be no favour situation to conduct Civic Polls 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X