சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பாதிப்பு வெகுவாக குறைகிறது- இன்று 2,869 பேருக்கு கொரோனா!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் தற்போது 4-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 2869 பேருக்கு கொரோனா உறுதியானது.

தமிழக அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்று பாதிப்பால் கவலைக்கிடம்- தீவிர சிகிச்சை: மருத்துவமனை அறிக்கைதமிழக அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்று பாதிப்பால் கவலைக்கிடம்- தீவிர சிகிச்சை: மருத்துவமனை அறிக்கை

3,000க்கும் கீழ் ஒருநாள் பாதிப்பு

3,000க்கும் கீழ் ஒருநாள் பாதிப்பு

இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,09,005 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் 2-வது நாளாக 3,000க்கும் கீழே ஒருநாள் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.

இன்று 31 பேர் பலி

இன்று 31 பேர் பலி

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 31 பேர் பலியாகினர். இதனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,924 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற பின்னர் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் இன்றைய எண்ணிக்கை 4019. இதனனையடுத்து தமிழகத்தில் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 6,67,475.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 30,606 மட்டும்தான். இந்திய அளவில் ஆக்டிவ் கேஸ்களில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது.

மாவட்டங்களில் நிலவரம்

மாவட்டங்களில் நிலவரம்

சென்னையில் 764; கோவையில் 271 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சேலத்தில் 196; திருப்பூரில் 112 பேருக்கும் கொரோனா உறுதியானது. பிற மாவட்டங்களிலும் கணிசமான அளவு கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது.

English summary
Tamilnadu has reported 2,869 new Coronavirus cases taking number of active patients to 30,606.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X