சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை வெல்வோம்-ஒரே நாளில் 5000 பேர் வீடு திரும்பினர்- நம்பிக்கை தரும் தமிழக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் பரவலாக குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பது நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. இதில் 1,51,820 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,167 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 47,340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது!தமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது!தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது!

தென் தமிழகத்தை வதைக்கும் கொரோனா- மதுரை 341; தூத்துக்குடி 269; விருதுநகர் 175 பேருக்கு பாதிப்புதென் தமிழகத்தை வதைக்கும் கொரோனா- மதுரை 341; தூத்துக்குடி 269; விருதுநகர் 175 பேருக்கு பாதிப்பு

100ஐ கடந்த பாதிப்புகள்

100ஐ கடந்த பாதிப்புகள்

கிராமங்களை அதிகமாக உள்ளடக்கிய தென்மாவட்டங்களில் இப்போது கொரோனா பாதிப்பு அலை உக்கிரம் காட்டுகிறது. மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா கோரத்தாண்டவமாடுகிறது. தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் 100-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் தென்மாவட்டங்கள் அதிகம்.

மதுரையில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு

மதுரையில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு

அதேநேரத்தில் நாம் இன்னொன்றையும் நம்பிக்கையுடன் கவனிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மதுரையில்தான் இன்று ஒரே நாளில் 1188 பேர் வீடு திரும்பியுளனர். மதுரையில் இதுவரை மொத்தம் 3855 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 3347 பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திண்டுக்கல், சென்னை

திண்டுக்கல், சென்னை

திண்டுக்கல் மாவட்டத்தில் 1066 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போதும் 645 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். 404 பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கூட 80,961 பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற போதும் தற்போதைய நிலையில் 15,606 பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Recommended Video

    Health Tips : மாணவர்களின் கண் பார்வை, ஞாபக திறன் அதிகரிக்க..
    செங்கல்பட்டு டிஸ்சார்ஜ்

    செங்கல்பட்டு டிஸ்சார்ஜ்

    சென்னையில் இதுவரை மொத்தம் 64,036 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 1318 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டை எடுத்துக் கொண்டால் 8741 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது; ஆனால் 6299 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 172 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 2269 பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் விதைத்துள்ளது.

    English summary
    4,496 new Corona positive cases and 68 deaths have been reported in Tamil Nadu today. Total number of cases rise to 1,51,820 including 47,340 active cases, 1,02,310 discharged cases and 2,167 deaths.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X