தமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 569 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 62,405 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 569 பேருக்கு கொரோனா உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1,53,30,315 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,34,740.

தமிழ்நாட்டில் இன்று கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 642. தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 8,17,520.
தமிழகத்தில் இன்று மட்டும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 12,316 ஆகும்.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 4,904. மாவட்டங்களில் சென்னையில் 168 பேருக்கும் கோவையில் 55 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சென்னையில் இன்று கொரோனாவால் யாரும் மரணம் அடையவில்லை.