சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்

தமிழக வரலாற்றில் முதன் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பத்தாம் வகுப்பு தேர்வு வரலாற்றில் முதன்முறையாக தேர்வுகள் வரலாற்றில் மாணவிகளை முந்தியுள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு எழுதிய அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, முதன்முறையாக மாணவிகளை விட அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

TN SSLC result 2020: Boys Students who preceded Girls students for the first time in the history

இந்த நிலையில் தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் பட்டியலும் இன்று வெளியானது. காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 9,39,829 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 4,68,070 மாணவர்கள், 4,71,759 மாணவிகள் மற்றும் 6,235 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள். இந்த ஆண்டு 100 சதவிகித தேர்ச்சி அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது- முதல் முறையாக மாணவ, மாணவியர் 100% தேர்ச்சிதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது- முதல் முறையாக மாணவ, மாணவியர் 100% தேர்ச்சி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
For the first time in the history of Tamil Nadu, 100% pass in the Class X general examination has been declared. For the first time in the history of Tamil Nadu SSLC class X Examinations, the Boys students have surpassed the Girls students in the history of examinations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X