சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுக்கெல்லாம் மரண தைரியம் வேணும்... சூர்யாவுக்கு ஆதரவாக... ஹேஸ்டேக்குகள் டிரண்ட்!!

Google Oneindia Tamil News

சென்னை: ''இதுக்கெல்லாம் மரண தைரியம் வேணும், தமிழ்நாடு உங்களுடன் துணை நிற்கும்'' என்று நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக்குகள் டிரண்ட் ஆகி வருகின்றன.

''கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது; நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.

Hashtag trending in the social media supporting actor Suriya on NEET Exam

அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்வி முறையில், இனி பெற்றோர்களும், ஆசியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்.

மகாபாரத காலத்து துரோணர்கள்‌ ஏகலைவன்களிடம்‌ கட்டை விரலை மட்டுமே காணிக்கையாகக் கேட்டார்கள்‌. நவீனகால துரோணர்கள்‌ முன்னெச்சரிக்கையுடன்‌ ஆறாம்‌ வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்‌ என்று கேட்‌கிறார்கள்‌. இதையெல்லாம்‌ கடந்து படித்து முன்னேறுகிறவர்களை 'பலியிட' நீட்‌ போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்‌திருக்கிறார்கள்'' என்று நடிகர் சூர்யா நேற்று பதிவிட்டு இருந்தார்.

நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. உயிருக்கு பயந்து காணொளி காட்சி மூலம் வழக்குகளை நடத்தும் நீதிமன்றங்கள் கூட மாணவர்களை பயப்படாமல் தேர்வெழுத போகச் சொல்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த கருத்து தொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். I Support Suriya Anna, #TNStandWithSuriya, #நீட்என்ற_மனுநீதிதேர்வு ஆகிய ஹேஸ்டேக்குகளை டிரண்ட் செய்து வருகின்றனர். இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும், தேசிய கல்விக் கொள்கை மற்றும் சாத்தான்குளம் சம்பவம் ஆகியவற்றுக்கும் தைரியமாக தனது கருத்துக்களை சூர்யா பதிவு செய்து இருந்தார்.

இவருக்கு ஆதரவான பதிவுகளில், சூர்யாவை கிங் என்றும், இதுக்கெல்லாம் மரண தைரியம் வேணும், தமிழ்நாடு உங்களுடன் துணை நிற்கும் என்ற கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

English summary
Hashtag trending in the social media supporting actor Surya on NEET Exam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X