சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்படியா எக்சாம் வைப்பது... ஒரே நாளில் பி எட் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு: மாணவர்கள் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே நாளில் ஆசிரியர் தகுதி தேர்வும், பி எட் படிப்புக்கான இறுதி ஆண்டு தேர்வும் நடப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 2 வருடங்கள் கழித்து வரும் ஜுன் 8 மற்றும் 9ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Students shocked over same Day of B Ed and Teacher Eligibility exams

இதில் முதல் தாள் தேர்வுக்கு ஒரு லட்சத்து 83 பேர் பேரும், 2ம் தாள் தேர்வுக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சிபிஎஸ்சி ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு கோரிய வழக்கு.. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு சிபிஎஸ்சி ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு கோரிய வழக்கு.. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

இதனிடையே ஜுன் 8ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் நிலையில், அதே நாளில் தான் பிஎட் இறுதியாண்டு தேர்வும் நடக்கிறது. இந்த அட்டவணை ஏற்கனவே வெளியாகிவிட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிஎட் இறுதி ஆண்டு மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள் ஆவர். இவர்களில் ஏராளமானோர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணபித்துள்ளனர். இதனால் ஏதேனும் ஒரு தேர்வில் தான் இவர்களால் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் தகுதி தேர்வை வேறு ஒருநாளுக்கு தள்ளி வைக்க வேண்டும் என பிஎட் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
TN B.ED collage Students are shocked over same Day of B Ed and Teacher Eligibility exams
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X