சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிஸ்மிஸ் செஞ்சா 1,500 ஆசிரியர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவாங்க.. பட்டதாரி ஆசிரியர் சங்கம் பகீர்

Google Oneindia Tamil News

சென்னை: தகுதி தேர்வில் தேர்ச்சி பெறதா 1,500 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தால் தற்கொலைக்கு செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என பட்டதாரி ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக அலுவலகத்தில் அதன் தலைவர் மாயவன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

TN teacher association says 1500 teachers may Forced to commit suicide for TN govt dismiss action

அப்போது அவர் கூறுகையில், "2013ம் ஆண்டுக்கு பிறகு 4 வருடங்களும், 2017 ல் இருந்து இதுவரையும் டெட் தகுதித் தேர்வு நடத்தப்படாமல் உள்ளது.

10 தேர்வுகள் நடத்த வேண்டிய இடத்தில் இதுவரை 4 தேர்வுகளையே தமிழக அரசு நடத்தி இருக்கிறது. இந்த சூழலில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல், தமிழக அரசின் உதவி பெறும் உயர்நிலை மேல் நிலைப்பள்ளிகளின் பணிபுரியும் 1500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

கருணாநிதிக்கு 6 அடி இடம் தராத எடப்பாடிக்கு நீங்கள் வாக்களிக்கலாமா.. ஸ்டாலின் கேள்விகருணாநிதிக்கு 6 அடி இடம் தராத எடப்பாடிக்கு நீங்கள் வாக்களிக்கலாமா.. ஸ்டாலின் கேள்வி

தகுதி தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பது பாரபட்சமானது. 23.8.2010-ல் இருந்து 16.11.2012 வரையிலான காலகட்டத்திற்க்குள் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.

English summary
Tamil Nadu govt to sack 1,500 teachers who haven’t cleared TET but TN teacher association says 1500 teachers may Forced to commit suicide for dismiss action
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X