சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சொன்னபடியே வெளுத்து வாங்கிய கனமழை.. பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் மீண்டும் அலார்ட்

Google Oneindia Tamil News

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றும் நாளையும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல மிதமான மழை பெய்யக்கூடும்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

திருச்சியில் 3ஆவது நாளாக இடியுடன் கூடிய கனமழை.. சாலைகளில் வெள்ளப்பெருக்குதிருச்சியில் 3ஆவது நாளாக இடியுடன் கூடிய கனமழை.. சாலைகளில் வெள்ளப்பெருக்கு

சென்னைக்கு வாய்ப்பு

சென்னைக்கு வாய்ப்பு

சென்னையை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காரணப்படும்.நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டிஇருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் கனமழை

திண்டுக்கல்லில் கனமழை

தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் முண்டக்காயத்தில் 15 செமீ மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் 11 செமீ மழையும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 10 செமீ மழையும் பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நீட்டாமங்கலம், பெரம்பலூர் மாவட்டம் பாடலூர், ஆகிய ஊர்களில் 8 செமீ மழையும் பெய்துள்ளது.

சிவகங்கையில் கனமழை

சிவகங்கையில் கனமழை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, ஈரோடு மாவட்டம் தாளவாடி, நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் ஆகிய ஊர்களில் 7 செமீ மழையும், விழுப்புரத்தில் 6 செமீ மழையும் பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், விருதநகர் மாவட்டம் சாத்தூர் உள்பட இந்த மாவட்டங்களில் பல பகுதிகளில் 5 செமீ மழை பெய்துள்ளது.

திருப்பூரில் மழை

திருப்பூரில் மழை

இதேபோல் மதுரை, தர்மபுரி, கோவை, திருச்சி, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, பெரம்பலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 4 செமீ மற்றும் 2 செமீ மழை பதிவாகி இருந்தது. தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்துள்ளது. திருப்பூர், கரூர், தேனி, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. சென்னை கடலூர், கன்னியாகுமரி , திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பெய்துள்ளது.

கடலுக்கு செல்ல வேண்டாம்

கடலுக்கு செல்ல வேண்டாம்

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கொடி வரை இன்று இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் தெற்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English summary
Heavy rain may lashed many district in next 24 hourse at tamil nadu. Heavy to very heavy rain is likely to fall at Salem, Dharmapuri, Krishnagiri, Namakkal, Dindigul, Thiruvannamalai, Karur, Madurai, Trichy, Pudukottai, Sivagangai districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X