சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வட கிழக்கு பருவ மழை.. அடேங்கப்பா.. ரொம்ப லென்த்தா போகும் போலயே... வெதர்மேன் சொல்லும் சேதி!

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த ஆண்டில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி இறுதி வரை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

Recommended Video

    14 மாவட்டங்களில் பட்டாஸ் காட்டும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு..!

    கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது.

    TN Weatherman has said that the northeast monsoon will last till the end of January

    இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும்.

    கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. சில புயல்கள் வந்த புண்ணியத்தால் பலத்த மழை கொட்டி, முக்கியமான ஏரிகள், குளங்கள் நிரம்பின.இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதி வரை நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் 1985 ஜனவரி 17-ல் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றது. 1986 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் ஜனவரி 19 அன்று வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றது. இந்த சாதனையை இந்த ஆண்டு முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    டெல்டா மாவட்டங்கள் முதல் கன்னியாகுமரி வரையிலான தென் கடலோர தமிழ்நாடு பருவமழையும் இந்த மாத முடிவை எட்டியுளளன. என்று வெதர்மேன் கூறியுள்ளார்.

    English summary
    Tamil Nadu Weatherman has said that the northeast monsoon which started last year will continue till the end of January
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X