சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல் மழை.. நல்லா நனைங்க.. விட்டு விட்டு சின்ன சின்னதா பெய்யுமாம்.. வெதர்மேன் சொல்கிறார்!

சென்னையில் வரும் 26-ம் தேதி வரை மழை என்று தமிழக வெதர்மேன் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Chennai Rain: சென்னையை முத்தமிட்ட முதல் மழை- வீடியோ

    சென்னை: சென்னை முழுசும் கொண்டாடி வருகிறது மழையை.. சின்ன மழைதான்.. ஆனாலும் மக்கள் அத்தனை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டுள்ளனர். இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    நீண்ட காலம் தாயைப் பிரிந்து கிடக்கும் குழந்தை தாயைக் கண்டதும் எப்படி ஓடிப் போய் நெஞ்சில் முட்டி அழுது தீர்க்குமோ அப்படித்தான் இருக்கிறது சென்னை மக்களின் நிலையும். அத்தனை கஷ்டப்பட்டு விட்டார்கள் சென்னை மக்கள்.

    TN Weatherman says Chance to Rain in Chennai till June 26th

    196 நாட்களாக ஒரு சின்ன பொட்டு கூட வைக்கவில்லை இந்த மழை. ஆனால் இன்று வந்து பெய்த ஒவ்வொரு துளியும் தேன் துளிகளாக மாறி மக்களின் உள்ளத்தை கிறங்கடித்து விட்டது. காதலுடன் கூடிய காதலியின் நிலையில்தான் உள்ளனர் மக்கள். அப்படி அனுபவிக்கிறார்கள் மழையை.

    இந்த நிலையில் இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் சில தகவல்களைக் கூறியுள்ளார். அதன்படி இந்த மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்யுமாம். அதேசமயம், தென் சென்னையில் மழை பெய்தால் வட சென்னையில் இருக்காதாம். அதேபோல தொடர்ந்தும் பெய்யாதாம்.

     எப்படியிருந்த புழல் ஏரி இப்படியாகிடுச்சே.. பகீர் கொடுக்கும் சாட்டிலைட் புகைப்படம் எப்படியிருந்த புழல் ஏரி இப்படியாகிடுச்சே.. பகீர் கொடுக்கும் சாட்டிலைட் புகைப்படம்

    10 நிமிடம், அரை மணி நேரம் என விட்டு விட்டு பெய்யுமாம். அடுத்த 6 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்குமாம். எனவே கொளுத்தும் வெயிலிலிருந்து சென்னை மக்களுக்கு ஒரு வழியாக விடுதலை கிடைத்துள்ளது. விட்டு விட்டு பெய்தாலும் பூமி நனைந்தால் போதும்.. அதன் மூலம் குடிநீர்ப் பஞ்சத்துக்கு ஏதாவது லேசான விடிவு கிடைத்தால் கூட போதுமே என்ற மனநிலையில்தான் மக்கள் உள்ளனர்.

    English summary
    TN Weatherman Pradeep John says, Chance to Rain in Chennai June 26 and
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X