சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம வெயில் அடிக்கும்.. அனல் பறக்கும்.. கவனமா இருங்க.. வெதர்மேன் அட்வைஸ்

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் அதிகமாக அடிக்கும் என கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை இப்போதைக்கு இந்த வெயில், அனலிலிருந்து விடிவு காலம் இல்லை போல. இன்றும் அனல் காற்று வீசுமாம். வெதர்மேனே சொல்லி விட்டார்.

சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று கடுமையான வெயில் அடிக்கும். 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் பதிவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

TN weatherman says that, Heat will sizzle with 40 + temperature in many Districts including Chennai

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உஷ்ணமாக இருக்கிறது கோடை காலம். மண்டை காய்கிறது. ஊட்டி மட்டும்தான் வெயில் கொடுமையை சந்திக்காத ஒரே மாவட்டமாக இருக்கிறது. அந்த அளவுக்கு எங்கு போனாலும், வெயில் வெயில் வெயில்தான். அனல் அனல் அனல்தான்.

வாயு என்ற புயல் வந்தது. வந்தாலும் வந்தது காற்றின் ஈரப் பதத்தை வாரிச் சுருட்டிக் கொண்டு போய் விட்டது. அதனால்தான் இத்தனை அனலாக இருக்கிறது தமிழ்நாடு.

இந்த நிலையில் இன்றும் கூட அனல் இருக்குமாம். வெதர்மேன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்கள், அருகாமையில் உள்ள வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் பதிவாகும். தமிழகம் மற்றும் சென்னையில் தற்போது நிலவி வரும் அனல் காற்று 20ம் தேதிக்கு மேல் விடைபெறும் வாய்ப்பை எதிர்பார்க்கலாம். அதுவரை அனல் அடிக்கவே செய்யும்.

இது கொஞ்சம் கஷ்டம் தான்.. ஆனா, இப்டி சாப்பிட்டா பீட்சா ப்ரீயா தர்றாங்களாம்..!இது கொஞ்சம் கஷ்டம் தான்.. ஆனா, இப்டி சாப்பிட்டா பீட்சா ப்ரீயா தர்றாங்களாம்..!

வாயு புயலானது, தற்போது மேகக் கூட்டம் இல்லாமல் நகர்ந்து வருகிறது. வறண்ட காற்றுடன் அது பயணிக்கிறது. புயலானது, ஈரப் பதத்தை ஈர்த்து விட்டதால் தமிழகத்தில் வறண்ட வானிலையும், வெப்பமும் அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார் வெதர்மேன்.

English summary
Chennai, Pondy, Cuddalore, Nagai and all areas in Northern coastal district and near by district like, Vellore, Kancheepuram, Tiruvallur, Villupuram, Thanjavur will sizzle with 40 + temperature. Heat Wave will finally relent in Chennai and Tamil Nadu after 20th June
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X