சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏழை மாணவர்களுக்கான 25% ஒதுக்கீடு எங்கே...? தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது காங்கிரஸ் விளாசல்

Google Oneindia Tamil News

சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 25 % ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை தனியார் பள்ளி நிர்வாகங்கள் தொடங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 % ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் பல குளறுபடிகள் நிகழ்வதாக கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

21-ம் நூற்றாண்டுக்கான அடித்தளமே புதிய கல்வி கொள்கை- பிரதமர் மோடி 21-ம் நூற்றாண்டுக்கான அடித்தளமே புதிய கல்வி கொள்கை- பிரதமர் மோடி

வரலாற்றுச் சிறப்பு

வரலாற்றுச் சிறப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டத்தை இயற்றியது. அது, 2010 ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளும் கல்வி பெறுவதில் சமவாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது தான் இலவச கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டம்.

தனியார் பள்ளிகள்

தனியார் பள்ளிகள்

இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் இலவச கல்வி வழங்குகிற அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீதம் இடங்களை பொருளாதாரத்தில் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது. இதன்படி, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்பட வில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் அறிக்கை தரும்படி தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

30% இடங்கள்

30% இடங்கள்

தமிழகத்தை பொறுத்தவரை கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவிகித ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் பல குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 2014 முதல் 2019 வரை 25 சதவிகித ஒதுக்கீட்டின்படி, மொத்தமுள்ள இடங்களில் 70.31 சதவிகித இடங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளன. 30 சதவிகித இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கல்விக்கட்டணம்

கல்விக்கட்டணம்

அதே நேரத்தில் கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவிகித ஒதுக்கீட்டின்படி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டும். ஆனால் தமிழக அரசு அந்த கட்டணத்தை செலுத்துவதில் காலம் தாழ்த்துவதால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய தொகையை தனியார் பள்ளிகளுக்கு உடனடியாக செலுத்த வேண்டும்.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குகிற மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இணைய வழி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு கல்வி உரிமைச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

English summary
tncc asks, where is the 25% quota for poor students in private schools ?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X