சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோசமான காலகட்டத்தில் இருக்கிறோம்... கே.எஸ்.அழகிரி வேதனை

Google Oneindia Tamil News

சென்னை: ஜனநாயகம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், மிக மோசமான காலகட்டத்தில் நாடு இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

போராடி பெறப்பட்ட சமூகநீதி அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை தமிழகத்தில் அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாகவும் விமர்சித்தார்.

காரணமின்றி தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முடியாது... பாதுகாப்பு கெடுபிடிகாரணமின்றி தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முடியாது... பாதுகாப்பு கெடுபிடி

பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை

மத்திய அரசின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதாக கூறி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, ஜெயக்குமார் எம்.பி., ஆகியோரை தவிர மற்ற காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

பெயர் பொருந்தாது

பெயர் பொருந்தாது

தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்தால் கூட அவர்களால் செய்ய முடியாத காரியத்தை எல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து முடிப்பதாக விமர்சித்தார். மேலும், அதிமுகவுக்கு திராவிட இயக்கம் என்ற பெயர் அறவே பொருந்தாது என அவர் கூறினார்.

சமூக நீதி ஒழிப்பு

சமூக நீதி ஒழிப்பு

நாடு மோசமான காலகட்டத்தில் இருப்பதாகவும், சமூக நீதி அடியோடு ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கே.எஸ்.அழகிரி வேதனை தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு புதிய புதிய பெயர்கள் சூட்டப்பட்டு அது நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதாகவும் கூறினார்.

சிந்திக்க வேண்டும்

சிந்திக்க வேண்டும்

தமிழகத்தில் 5, 8, 10, மற்றும் 11, 12-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும், இந்த திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த எடப்பாடி அரசுக்கு என உரிமை உள்ளது எனவும் வினவினார். மேலும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் தான் இப்படி புதிய பெயர்களில் நடைமுறைக்கு வருகிறது என்பதை சிந்திக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

English summary
tncc president k.s.azhagiri slams cm edappadi palanisami
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X