சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒரு அரசியல் கோமாளி...கே.எஸ்.அழகிரி விளாசல்

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சி. கைது: காரணம் தேடும் சி.பி.ஐ.!

    சென்னை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அரசியல் கோமாளி என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஜெயலலிதா இருந்தவரை கொத்தடிமைகளாக இருந்த அதிமுக அமைச்சர்கள் இப்போது அரசியல் கோமாளிகளை போல் நடந்துகொள்கிறார்கள் எனக் கூறியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சோனியாகாந்தியை பற்றியும், ராகுல் காந்தி பற்றியும் நாக்கில் நரம்பின்றி பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    tncc president k.s.azhagiri slams minister rajendrabalaji

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விரைவில் சிறை செல்ல இருக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சோனியா, ராகுலை பற்றி பேச அருகதை இல்லை எனத் தெரிவித்துள்ளதோடு, தரம் தாழ்ந்த அரசியல் மூலம் காங்கிரஸ் தலைவர்களின் புனிதத்தை சிதைத்துவிட முடியாது என கூறியுள்ளார். மேலும், ஊழல் செய்வதையே அன்றாடத் தொழிலாக கொண்டுள்ள ராஜேந்திரபாலாஜி போன்ற அமைச்சர்களை தோலுரித்துக் காட்டுகிற காலம் வெகு தொலைவில் இல்லை என எச்சரித்துள்ளார்.

    அப்படின்னா.. இது திமுகவுக்கு வச்ச குறியா.. வைகோ, திருமா நிலை என்னாகும்.. பரபரக்கும் சின்ன பிரச்சினை!அப்படின்னா.. இது திமுகவுக்கு வச்ச குறியா.. வைகோ, திருமா நிலை என்னாகும்.. பரபரக்கும் சின்ன பிரச்சினை!

    அமைச்சர்களின் முகத்திரையை தமிழக காங்கிரஸ் கமிட்டி கிழித்தெறிந்து அவர்கள் யார் என்பதை மக்களுக்கும் அடையாளம் காட்டுவோம் எனக் குறிப்பிடுள்ளார். மேலும், அமைச்சர்களில் சிலர் தான்தோன்றித்தனமாகவும், தரக்குறைவாகவும் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார்.

    அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாய்க்கு வந்தபடி எல்லோரையும் வசைபாடுவதால், அவர் ஊடக வெளிச்சத்தில் குளிர்காய்ந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார் கே.எஸ்.அழகிரி.

    English summary
    tncc president k.s.azhagiri slams minister rajendrabalaji
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X