சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் போல ஸ்டாலினும் நானும் பார்க்காமலே பேசிக் கொள்வோம்... கே.எஸ். அழகிரி

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தாமும் பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழனும் போல பார்க்காமலேயே பல விஷயங்களை பேசிக் கொள்வோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று கே.எஸ். அழகிரி கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 17-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டதில் தி.மு.க.விடம் எத்தனை இடங்கள் கேட்பது உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கப்படும்.

TNCC to discuss on Local Body Elections on Nov.17

பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல தாமும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் பார்க்காமலேயே பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகத்தில் இருந்த வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்.

இஸ்லாமியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்றது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தத் தீர்ப்பை நாங்களும் ஏற்றுக்கொண்டோம்.

தலைக்குனிவு.. கழிவுகளை அகற்றும் போது விஷவாயு தாக்கி இறப்போர் தமிழகத்தில் அதிகம்.. ஸ்டாலின்தலைக்குனிவு.. கழிவுகளை அகற்றும் போது விஷவாயு தாக்கி இறப்போர் தமிழகத்தில் அதிகம்.. ஸ்டாலின்

நாங்கள் அந்தத் தீர்ப்புக்கு எதிராக இருந்தால் சிறுபான்மையினருக்கு ஆபத்து விளையும். பல சிறுபான்மை அரசியல் கட்சிகளே அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், மேற்கொண்டு இந்தப் பிரச்சினை வேண்டாம் என்பதற்காகத்தான்.

எனவே பெரிய நோக்கத்தோடு, நல்ல நோக்கத்தோடு, திறந்த மனதோடு எடுக்கப்பட்ட முடிவு அது. இந்தியா மட்டுமல்ல, உலக சமூகமும் காங்கிரஸினுடைய நிலையை ஆதரிக்கிறது.

காங்கிரஸ் மாற்றுக் கருத்து சொன்னால், இந்தியாவில் இரத்த ஆறு ஓடும். நாங்கள் அதை விரும்பவில்லை. எங்களுடைய நிலையை சிறுபான்மை அரசியல் கட்சிகளும் அந்த சமூகங்களும் ஏற்றுக் கொண்டன. இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறினார்.

English summary
Tamilnadu Congress Committee President KS Azhagiri said that they will discuss on the Local Body Elections on Nov.17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X