சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது தீப்பிடித்த காடு பறவைகளே.. பத்திரம்.. மக்களுக்கு வைரமுத்து வேண்டுகோள்

லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும் பத்திரமாக இருங்கள் என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இபாஸ் ரத்து, பொது போக்குவரத்து சேவை தொடக்கம் என அனைத்திலும் அரசு தளர்வு அளித்துள்ளது. இந்த தளர்வு காலத்தில் பாதுகாப்பாக பத்திரமாக இருங்கள் என்று கூறியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

TNLockdown covid 19: Vairamuthu tweets about unlock 4

ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க் கொல்லி நுழைந்துவிடக் கூடாது. மீண்டும் இயங்கப்போகும் வாழ்வியல் வெளியில் கடும் கட்டுப்பாட்டைப் பெரிதும் கைக்கொள்வீர் பெருமக்களே! இது தீப்பிடித்த காடு பறவைகளே! பத்திரம். என்று பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் கடுமையான விதிமுறைகளுடன் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. 90 நாட்கள் கழித்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

TNLockdown covid 19: Vairamuthu tweets about unlock 4

தற்போது 8ஆம் கட்ட லாக்டவுன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் 4 முக்கியமான தளர்வு, முதல்வர் பழனிசாமி அதிரடி

    நாடு முழுவதும் 35 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 28 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 4 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றரை லட்சம் பேர் மீண்டுள்ளனர். இந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

    English summary
    Poet Vairamuthu has urged on his Twitter page to be safe even if the lockdown relaxation is announced.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X