சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    TNPSC GROUP 1 EXAM | 69 post | How can apply

    சென்னை: துணை ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பது ஆரம்பம் ஆகி உள்ளது. வரும் பிப்ரவரி 19ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான விவரம் சமீபத்தில் வெளியானது. குரூப்-1 முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நடக்க உள்ளது.. குரூப்-1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    tnpsc group 1 exam: 69 post, how can apply, age, education qualification details here

    துணை ஆட்சியர் (18), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (19) , வணிக வரித்துறை உதவி ஆணையர் (10), கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் (14), ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (7) , மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி (1) ஆக மொத்தம் 69 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    வணிக வரித்துறை உதவி ஆணையர் பணியிடங்களை தவிர மற்ற பணியிடங்களுக்கு பொதுபிரிவினருக்கு 32 வயதும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 37 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்வுக்கு நேற்று தொடங்கி வரும் பிப்ரவரி 19-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குருப் 1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விபரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விபரங்களை கீழே உள்ள பிடிஎப்பில் அறியலாம். அல்லது டிஎன்பிஎஸ்சி இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpsc.exam.in, www.tnpsc.exam.net ஆகியவற்றில் அறியலாம்.

    குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று ஆட்சிப் பணி, காவல் பணியில் பணியாற்றுபவர்கள 15 ஆண்டுகளுக்குப் பின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்படுவார்கள்.

    English summary
    tnpsc group 1 exam 2020 : tottaly 69 post, exam date, how can apply, salary, age, education qualification details here
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X