டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஆன்சர் கீ வெளியீடு - உங்க ரிசல்ட் எப்படி? உடனே செக் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, 2ஏ தேர்வுகளின் தற்காலிக ஆன்சர் கீ www.tnpsc.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அரசு வெளியிட்டுள்ள இந்த தேர்வு முடிவுகளில் ஆட்சேபனை இருக்கும் தேர்வர்கள், ஒருவார காலத்துக்குள் இணைய வழியில் மட்டும் பதிவு செய்யலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு மே 21 அன்று நடைபெற்றது. 11,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 285 பேர் தேர்வு எழுதவில்லை. சுமார் 9 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேர் அதாவது 84.44 விழுக்காடு பேர் இந்த தேர்வை எழுதினர்.
இந்த தேர்வில் தமிழில் தேர்வெழுத விரும்புவோருக்கு தமிழில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்பட்டது. இதுவே ஆங்கிலத்தில் தேர்வெழுத விரும்புவோருக்கு, பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொது அறிவியல் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பெண் 300க்கு எடுத்துக்கொள்ளப்படும். அதற்கு 90க்கும் அதிகமான மதிப்பெண் பெறுவது அடிப்படை.
டிஎன்பிஎஸ்சி குரூப் VII-B.. இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. கல்வித்தகுதி - முழு விவரம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட்
இந்தத் தேர்வின் முடிவுகள், ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும். டிசம்பர் 2022 - ஜனவரி 2023 மாதங்களில், கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்சர் கீ வெளியீடு
தேர்வில் சில வினாக்கள் பிழையாக கேட்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன், குரூப் 2, 2ஏ தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியும் தவறானவை அல்ல. தேர்வுக்கான தற்காலிக ஆன்சர் கீ விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இணைய தளத்தில் செக் பண்ணலாம்
இந்நிலையில் தேர்வின் தற்காலிக / உத்தேச விடைத்தாள் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தற்காலிக ஆன்சர் கீ http://www.tnpsc.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. TNPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in சென்று ஆன்சர் கீ லிங்கை கிளிக் செய்யவும். உங்கள் விவரங்களை உள்ளிடவும். TNPSC குரூப் 2 பிரிலிம்ஸ் ஆன்சர் கீ 2022 ஐ டவுன்லோட் செய்யவும்.

விடைகளில் ஆட்சேபணை
அரசு வெளியிட்டுள்ள இந்த தேர்வு முடிவுகளில் ஆட்சேபனை இருக்கும் தேர்வர்கள், ஒருவார காலத்துக்குள் இணைய வழியில் மட்டும் பதிவு செய்யலாம். மூன்று தேர்வுகளுக்குமான விடை மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கும் பொது லிங்க் - https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=9ebe752b-d3ed-4b6f-b9ba-02708064637c
விடைகளில் ஆட்சேபனைகள் இருந்தால், ஜூன் 3-ம் தேதி மாலை 5.45 மணிக்குள், இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஜூன் 3ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணையவழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.

ஜூலை 24ல் குரூப் 4 தேர்வு
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பாட புத்தகங்களை மட்டுமே மேற்கோளாக காண்பிக்க வேண்டும். ஆட்சேபனைகள் குறித்து வல்லுநர்கள் குழு தேர்வுக்கான விடைகளை இறுதி செய்து அறிவிக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 7,382 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்துகிறது.