சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'6491 குரூப் 4 பணியிடங்கள்' 10ம் வகுப்பு படித்தால் ரூ.62 ஆயிரம் வரை ஊதியம்.. டிஎன்பிஎஸ்சி

Google Oneindia Tamil News

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பணை இன்று டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6491 குரூப் 4 பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2018-2019. 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாடு அமைச்சுகப்பணி தமிழ்நாடு நீதி அமைச்சப்பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப்பணி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப்பணிகள் என ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (குரூப்-4) :நேரடியாக நடத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே.வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் தீவிரம்- 16 பேர் கூண்டோடு ராஜினாமா! மே.வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் தீவிரம்- 16 பேர் கூண்டோடு ராஜினாமா!

காலி பணியிட விவரம்

காலி பணியிட விவரம்

கிராம நிர்வாக அலுவலர் (பதவி குறியீடு எண்: 2025): 397 காலி பணியிடங்கள்
இளநிலை உதவியாளர் (பதவி குறியீடு எண்: 2600) (பிணையமற்றது): 2688 காலி பணியிடங்கள்
இளநிலை உதவியாளர் (பிணையம்) (பதவி குறியீடு எண்: 2400) 104 காலி பணியிடங்கள்
வரி தண்டலர்- நிலை -1 ((பதவி குறியீடு எண்: 2500) : 39 காலி பணியிடங்கள்
நில அளவர் (பதவி குறியீடு எண்: 2800) 509 காலி பணியிடங்கள்
வரைவாளர் (பதவி குறியீடு எண்: 2900) 74 காலி பணியிடங்கள்
தட்டச்சர் (பதவி குறியீடு எண்: 2200) 1901 பணியிடங்கள்
சுருக்கெழுத்து தட்டச்சர் (பதவி குறியீடு எண்: 2900) 784 பணியிடங்கள்,

தட்டச்சர் ஊதியம்

தட்டச்சர் ஊதியம்

ஆக மொத்தம் 6491 பணியிடங்களில் சுருக்கெத்து தட்டச்சர் ( 784) பணியிடங்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியம் ரூ.19500-:ரூ.62000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.20800-:ரூ.65500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜுலை 14 கடைசி நாள்

ஜுலை 14 கடைசி நாள்

காலிப்பணியிட விவரங்கள் தோரயமானது என அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி இன்று முதல் ( ஜுன் 14ம் தேதி) விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஜுலை 14ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். தேர்வு கட்டணமாக ரூ.100, செலுத்த வேண்டும். நிரந்தர பதிவு செய்யாதவர்கள் 150 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும்.

10ம் வகுப்பு தகுதி

10ம் வகுப்பு தகுதி

10 வகுப்பு படித்தவர்கள் அனைத்த பதவிக்கும் விண்ணப்பிக்கலாம். தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு மட்டும் தட்டெச்சு, சுருக்கெத்து பணியில் கூடுதலாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வயது சலுகை

வயது சலுகை

வயது வரம்பு: 01.07.2019 நிலவரப்படி விஏஓ பணியிடத்துக்கு பொதுப்பிரிவினர் குறைந்த பட்சம் 21 வயதும் அதிகபட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மற்ற எஸ்சி எஸ்டி, எம்பிசிசி, பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 40வயது வரை விண்ணப்பிக்கலாம். இளநிலை உதவியாளர், தண்டலர் வரைவாளர், நில அளவர் , தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குறைந்த பட்சமாக 18 முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் ஆதரவற்றோர் உள்ளிட்டோர் மற்றும் இதர பிரிவினருக்கான வயது சலுகைகள் மற்றும் முழு கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

English summary
6491 vacancy in tnpsc group 4 exam 2019, how to apply in tnpsc website, check details here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X