சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டி.என்.பி.எஸ்.சி-யின் பரிந்துரை ஏற்பு.. 50 பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியில்லை என அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50க்கும் மேற்பட்ட பட்டங்கள், அரசு வேலைவாய்ப்பிற்கு தகுதியானவை அல்ல என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் செயலாளர் மற்றும் சமநிலைக்குழு நிர்வாகிகள் பங்கேற்ற 60-வது சமநிலைக்குழு கூட்டம், கடந்த மாதம் நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் சில பட்டப்படிப்புகள், அரசு வேலை பெறுவதற்கு உரிய பட்டப்படிப்புகளுக்கு சமமாக இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

TNPSC Recommendation Accepted.. Announcing that 50 degrees are not eligible for government jobs

இத்தீர்மானத்தை அரசாணையாக பிறப்பிக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேண்டுகோள் விடுத்தது. இதனை பரிசீலித்த தமிழக அரசு அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பி.சி.ஏ பட்டப் படிப்பானது பி.எஸ்.சி கணித படிப்பிற்கு நிகரல்ல என குறிப்பிட்டுள்ளது.

பாரதியார் பல்கலைகழகம், திருவள்ளுவர் பல்கலைகழகம், பெரியார் பல்கலைகழகம் ஆகியவை அளிக்கும் எம்.எஸ்.சி அப்ளையிடு சயின்ஸ் நுண்ணுயிரியல் காமராஜர் பல்கலைகழகம் அளிக்கும் எம்.எஸ்.சி நுண்ணுயிரியல் முதுகலை படிப்புகள், எம்.எஸ்.சி விலங்கியல் முதுகலைபடிப்பிற்கு நிகராகாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பிரச்சாரம்.. பிரதமர் மோடியின் பதிலடி இதுதான்! கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பிரச்சாரம்.. பிரதமர் மோடியின் பதிலடி இதுதான்!

பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50-க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை அரசு வேலை வாய்ப்பிற்கு தகுதியாக கருதப்படும் படிப்புகளை கருத முடியாதென அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியற்றவை என தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது

English summary
Tamilnadu Government has declared that more than 50 degrees issued by universities and educational institutions in Tamil Nadu are not eligible for state employment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X