• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

டிரண்ட்டாகும் #TNRejectsNEP ஹேஸ்டேக்...பெரிய கதவில் சின்ன நாயும் செல்லலாமே...இது அண்ணா சொன்னது!!

|

சென்னை: தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக, எதிராக கருத்துக்கள் எழுந்து வருகின்றன. நாட்டிலேயே தமிழகத்தில்தான் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக உரத்த குரல் ஒலிக்கிறது. நாட்டிலேயே படிப்பு சதவீதமும் தமிழகத்தில்தான் அதிகம். பட்டதாரிகளும் தமிழகத்தில்தான் அதிகம். ஆதலால், குரலும் ஒன்றாக ஒலித்து வருகிறது.

தேர்தலில் போட்டியிட தயங்கிய துரைமுருகன்... தயாளு அம்மாள் தந்த ரூ10,000... ஸ்டாலின் சொன்ன ப்ளாஷ் பேக்

புதிய தேசியக் கல்விக் கொள்கையை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து மக்களிடம் ஜூலை 31ஆம் தேதி வரை கருத்துக்கள் கேட்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால், கருத்துக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டதா இல்லையா என்பது இன்றும் கேள்விக்குறியாக இருக்கிறது. அதுகுறித்த எந்த தகவலையும் மத்திய அரசு வெளியிடவில்லை.

#TNRejects NEPAL is trending in Twitter against new education policy

இந்தக் கல்விக் கொள்கையை விவாதத்துக்கு கூட எடுத்துக் கொள்ளவில்லை. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டம் கூடப் போவதில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் அமைச்சரவை கூறி இதற்கு ஒப்புதலும் அளித்தது. இதுவே ஜனநாயகத்தின் மீதான கேள்விக்குறியாக இருக்கிறது.

மாநில உரிமைகளை பாதுகாக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவைப்படுகிறார் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்

ஏற்கனவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு நகர்ப்புற மாணவர்களில் இருந்து கிராமப் புற மாணவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கிய அனிதாவை இழந்தது. இதற்குப் பின்னரும் தேர்வு எழுதச் சென்ற மையங்களில் மாணவர்களின் பெற்றோர் சிலர் இறந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

புதிய கல்விக்கொள்கையே தவறானது.. மும்மொழித்திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி.. ஸ்டாலின் பாராட்டு!

கல்வி என்பது அந்தந்த மாநிலத்தின் முடிவுக்கு விட்டு விட வேண்டும். தற்போது இருக்கும் முறையே சரியாக இருக்கும்போது ஏன் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முற்றிலும், இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையாக இது என்று அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நாடு முழுவதும் ஒரு மொழிக் கொள்கை என்பதை வலியுறுத்தி இந்தி திணிப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி இருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆக31 வரை லாக்டவுன் நீட்டிப்பு- கட்டுப்பாடுகள், தளர்வுகள் எவை? முதல்வரின் விரிவான அறிவிப்பு

இந்த நிலையில் தேசியக் கல்விக் கொள்கையில் இருக்கும் மும்மொழிக் கல்வி இன்னும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. இதில் மும்மொழிக் கல்வி ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் மாநிலத்தின் மீது திணிக்க முடியாது என்று தமிழகத்தில் இருந்து குரல் ஒலித்துள்ளது.

மேலும், இந்தக் கல்வி கொள்கை காவிமயமாக இருக்கிறது. பெண் கல்வி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மதிய உணவுத்திட்டம் கைவிடப்படுகிறது. தொழில் கல்வி என்ற பெயரில் குலக் கல்வி திணிக்கப்படுகிறது. 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது ஏற்றுக் கொள்ள முடியாது, கலைக்கல்லூரிகளில் சேருவதற்கு இந்திய நுழைவுத்தேர்வு தேவை இல்லாதது போன்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

#TNRejects NEPAL is trending in Twitter against new education policy

இதையேதான் திமுகவின் மறைந்த தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை கூறிச் சென்றார். அவர் தனது உரையில், ''இந்தியாவில் அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. ஏன் இது இணைப்பு மொழியாக இருக்கக் கூடாது. ஏன் சர்வதேச அளவில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள ஆங்கிலத்தை தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், தேசிய அளவில் தொடர்பை ஏற்டுத்திக் கொள்ள இந்தியை கற்க வேண்டும். பெரிய நாய் செல்ல பெரிய கதவும், சிறிய நாய் செல் சிறிய கதவும் தேவையா? சின்ன நாயும், பெரிய கதவையே பயன்படுத்தலாம் என்று நான் கூறுகிறேன்'' என்று தெரிவித்து இருந்தார். இவர் அழுத்தமாக இந்திக்கு எதிராக பேசி வந்தார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றார்.

  தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் - முதல்வர் திட்டவட்டம் | Oneindia Tamil

  அதையேதான் இன்று ஒட்டுமொத்தம் தமிழகமும், அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன. நேற்று வரை இதில் கருத்து தெரிவிக்காமல் இருந்த முதல்வரும் இன்று தமிழகத்தில் இருமொழிக் கல்வி கொள்கைதான் பின்பற்றப்படும் என்றார். இதற்காக அவருக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

  இந்த நிலையில்தான் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக டிவிட்டரில் இன்று காலை முதல் #TNRejectsNEP என்ற ஹேஸ்டேக் டிரண்ட் ஆகி வருகிறது.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  #TNRejects NEPAL is trending in Twitter against new education policy
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X