சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேமுதிகவின் அங்கீகாரம் ரத்து.. இனி முரசு சின்னமும் போச்சு.. தேர்தல் ஆணையம் நடவடிக்கை?

Google Oneindia Tamil News

Recommended Video

    எப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.

    சென்னை: தேமுதிகவின் அங்கீகாரம் ரத்து செய்வதற்காக மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    விஜயகாந்தின் தேமுதிக உதயமானதையும் அதன் பிறகு விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சியையும் யாராலும் மறக்க முடியாது. ஆனால் எத்தனை உயரம் பறந்தாலும் ஒரு நாள் கீழே வந்துதான் ஆக வேண்டும் என்பதை போலவும் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை போலவும் கூட்டணி வைத்து மக்களிடம் இருந்த நற்பெயரை கெடுத்து கொண்டது என்றே சொல்லலாம்.

    இந்த நிலையில் அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி தேமுதிகவின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் பார்ப்போம்.

    புதுச்சேரி சபாநாயகராகிறார் சிவக்கொழுந்து.. துணை சபாநாயகராகிறார் பாலன்!புதுச்சேரி சபாநாயகராகிறார் சிவக்கொழுந்து.. துணை சபாநாயகராகிறார் பாலன்!

    குரல்

    குரல்

    கடந்த 2005-ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியை விஜயகாந்த் தொடங்கினார். சினிமாவில் அநியாயத்திற்கு எதிராக தட்டிகேட்கும் கேரக்டரில் நடித்ததை பார்த்து மக்கள் விஜயகாந்தை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர். நம்ம கேப்டன் சினிமாவில் மட்டுமில்லைங்க.. நிஜத்திலும் அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பார்.

    10.08 சதவீதம்

    10.08 சதவீதம்

    கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனி போட்டியிட்டு 8 சதவீதத்துக்கு மேல் அதிகமான வாக்குகளை பெற்றது. இது தேமுதிகவுக்கு பெரும் திருப்புமுனையாக விளங்கியது. இதைத் தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக 10.08 சதவீதம் வாக்குகளை பெற்றது.

    மாநில அந்தஸ்தை பெற்றது

    மாநில அந்தஸ்தை பெற்றது

    அடுத்த கட்டமாக 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை தேமுதிக சந்தித்தது திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த தேர்தலில் 7.88 சதவீதம் வாக்கு சதவீதம் பெற்றதோடு 29 எம்எல்ஏக்கள் தேமுதிகவுக்கு கிடைத்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்தார். 2006,2009, 2011- ஆகிய தேர்தலில்களில் அதிகமான வாக்கு சதவீதத்தை பெற்றது அத்துடன் மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது.

    சட்டசபை

    சட்டசபை

    இதைத் தொடர்ந்து தேமுதிகவுக்கு இறங்குமுகமாகவே இருந்து வருகிறது. 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதன் வாக்கு வங்கியும் 5.19 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வாக்கு வங்கி 2.39 சதவீதமாக குறைந்தது.

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையம்

    இதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதமும் 2.19 சதவீதமாக குறைந்தது. 2014, 2016, 2019 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து 6 சதவீதத்துக்கு கீழ் வாக்கு சதவீதம் பெற்ற தேமுதிகவின் மாநில அந்தஸ்து அங்கீகாரத்தை ரத்து செய்யும் முயற்சியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

    முரசும் ரத்து

    முரசும் ரத்து

    தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் உரிய கட்சியிடம் விளக்கம் கேட்டு பின்னர் ரத்து செய்யப்படும். மாநில அந்தஸ்து ரத்தானால் அந்த கட்சியின் சின்னமான முரசு சின்னமும் ரத்து செய்யப்பட்டு அது சுயேச்சைகளுக்கான சின்னப் பட்டியலில் சேர்க்கப்படும்.

    English summary
    TNSEC is taking necessary steps to cancel the recognition for DMDK? As the party's vote percentage have gone below 6 percentage in the last 3 elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X