சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு.. தமிழக அரசு போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு
சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தினமும் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் மாதமான கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கி தை மாதம் முதல் வாரம் வரை மண்டல பூஜைக்கான வழிபாடு நடைபெறும்.
இந்த விழாவில் பங்கேற்க 48 நாட்கள் விரதம் இருந்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா என இந்தியா முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள் குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு புனித யாத்திரையாக செல்வார்கள்.
சபரிமலை உத்தரவுக்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது.. நீதிபதி நாரிமன் கண்டிப்பு

நாளைமுதல்
இதையொட்டி தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை முக்கிய நகரங்களில் இருந்து இயக்குவதுவழக்கம். அந்த வகையில் நாளை (நவம்பர் 15ம் தேதி) தொடங்கி வரும் ஜனவரி 20ம் தேதி வரை அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

திருச்சி புதுவையில் இருந்து
சென்னையிலிருந்து சபரிமலைக்கு தினமும் 55 பேருந்துக்களும், திருச்சி, மதுரை, புதுவை ஆகிய இடங்களில் இருந்து தினமும் தலா 2 பேருந்துகளும், தென்காசியிலிருந்து தினமும் 3 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

இணையதள முகவரிகள்
சபரிமலைக்கு தமிழக அரசின் சொகுசு பேருந்துகளை www.tnstc.in, www.redbus.in, www.busindia.com, www.paytm.com, www.makemytrip.com, www.goibgo.com உள்ளிட்ட இணையதள முகவரிகள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

பேருந்து விவரங்கள்
அதுமட்டுமல்லாது பேருந்துகள் பற்றிய விவரங்களையும் 9445014412, 9445014450, 9445014424, 9445014463, 9445014416 உள்ளிட்ட செல்போன் எண்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றும் தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!