சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசுக்கு சிறந்த நல்லாட்சி விருது கொடுத்தரைத் தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு அவர் மணமக்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் ஸ்டாலின் மேடையில் பேசுகையில், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சி பீகாரில் உள்ள நிதீஷ்குமாரின் கட்சி (ஐக்கிய ஜனதா தளம்). ஆனால் நிதீஷ் குமார் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்து ஓட்டுப்போட்டவர்.

 குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

மம்தா எதிர்க்கிறார்

மம்தா எதிர்க்கிறார்

ஆனால் ஆதரித்து ஓட்டுப்போட்ட பீகார் முதல்வர் நிதீஷ்குமார் என்ன செய்துள்ளார்? தன்னுடைய பீகார் மாநிலத்தில் சிஏஏ (குடியுரிமை திருத்த சட்டத்தை) எதிர்ப்போம். ஆதரிக்கமாட்டோம் என்கிறார். மேற்கு வங்கத்திலே தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்த்து கொண்டிருக்கிறார். ஆக இந்தியா முழுவதுமே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த சட்டத்தை தமிழகத்தில் மட்டுமே எதிர்க்க முடியாத ஒரு ஆட்சி இருக்கிறது.

அடிக்கணும்

அடிக்கணும்

இந்த லட்சணத்திலே தமிழக முதல்வர் பழனிச்சாமி பேசிக்கொண்டிருக்கிறார், நாங்கள் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். அவார்டு எல்லாம் வங்கிக்க்கொண்டிருக்கிறேன். விருதெல்லாம் வாங்கிக்கொண்டிருக்கிறேன் என்கிறார். இந்த விருது கொடுத்தவர்களைத்தான் கொண்டுவந்து முதலில் போட்டு அடிக்கணும். என்ன விருது" இவ்வாறு ஆக்ரோசமாக ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் தாக்கு

ஸ்டாலின் தாக்கு

மத்தியில் பாஜக ஆட்சியில் மக்கள் விரோத சட்டங்கள் தொடர்ந்து இயற்றப்படுவதாகவும் தனது பேச்சின் போது ஸ்டாலின் கடுமையாக சாடினார். தற்போது தமிழகத்தில் நடப்பத ஆட்சி கமிஷன் ஆட்சியாக இருப்பதாகவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் திருமண விழாவில் கடுமையாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் ஸ்டாலின் இந்த பேச்சுக்கு அதிமுக உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.

அதிமுக பதிலடி

அதிமுக பதிலடி

இதனிடையே ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "முதலில் ஸ்டாலின் அவரது முதுகை திரும்பி பார்க்க வேண்டும். 1996ல் சென்னையில் ரூ.1 கோடியில் செய்ய வேண்டிய பாலப்பணியை ரூ.1.5 கோடிக்கு செய்தது திமுக. தமிழகத்தில் விஞ்ஞான ரீதியில் திமுகவை தவிர வேறு யாராலும் ஊழல் செய்ய முடியாது" எனறு விமர்சித்தார்.

English summary
dmk leader mk stalin attacks aiadmk govt, to beat who give good governance award to Government of Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X