சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலில் விஜய் ஆதரவு "இந்த" கட்சிக்குதானாமே.. உண்மையா.. பண்ணை வீட்டில் பரபர ஆலோசனை?

விஜய் ஆதரவு யாருக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: மிக முக்கியமான விஷயம் ஒன்று விஜய் பற்றி அரசியல் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், ஒருவேளை அது உண்மையோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.

தேர்தல் விறுவிறுப்பு ஆரம்பமாகிவிட்டது.. திமுக, அதிமுக கூட்டணிகள் வழக்கம்போல சுறுசுறுப்பாகிவிட்டன... திமுகவில் பாமகவும், அதிமுகவில் பாஜகவும் நாளுக்கு நாள் ட்விஸ்ட்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கு நடுவில் ரஜினி வருவாரா? வரமாட்டாரா? என்று இன்னமும் நமக்கு உறுதியாக தெரியாவிட்டாலும், சம்பந்தமே இல்லாமல் திடீரென விஜய்-யின் அரசியல் பேச்சு கிளம்பி உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு விஜய் பிறந்த நாளுக்கு போஸ்டர்களை ஒட்டியபோதும் இப்படித்தான் பேச்சு எழுந்தது.. ஆனால் வருஷா வருஷம் அப்படித்தான் ரசிகர்கள் வருங்கால முதல்வரே, தலைவரே, எங்கள் எம்ஜியாரே என்று புகழ்ந்து போஸ்டர் ஒட்டி வருவதால், இந்த முறையும் அப்படித்தான் கருதப்பட்டது.

இவ்வளவு பிடிவாதமாக இருக்காரே தமிழருவியார்.. இவருக்காகவாது ரஜினி அரசியலுக்கு வருவாரா? இவ்வளவு பிடிவாதமாக இருக்காரே தமிழருவியார்.. இவருக்காகவாது ரஜினி அரசியலுக்கு வருவாரா?

 அரசியல்

அரசியல்

ஆனால் எஸ்ஏ சந்திரசேகரன் இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதால், இதை சாதாரணமாக கடந்து போய்விட முடியவில்லை.. 4 நாளைக்கு முன்பு எஸ்ஏசி அளித்த பேட்டியில், பாஜகவில் இணைய போகிறோம் என்ற தகவலில் உண்மை இல்லை.. மக்கள் அழைக்கும்போது விஜய் அரசியலுக்க வருவார்.. விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது, அரசியல் கட்சியாக மாறும் என்றார்.

 எஸ்ஏசி

எஸ்ஏசி

அரசியல் தொடர்பாக நடிகர் விஜய் எடுக்கும் முடிவுகளுக்கு காரணம், எஸ்ஏசி சந்திரசேகரின் தூண்டுதலே காரணம் என்ற விமர்சனங்கள் பல வருடங்களாகவே தமிழகத்தில் உண்டு.. மகனை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எஸ்ஏசியின் ஆசையையும் மக்கள் அறிந்த ஒன்றே.

 அறிவிப்புகள்

அறிவிப்புகள்

எதற்காக பாஜக என்று பேட்டியில் சொன்னார் என்பதுதான் குழப்பமாகிவிட்டது.. யார் இதை கிண்டியது? யார் பாஜகவில் விஜய் சேர போகிறார் என்று கொளுத்தி போட்டது தெரியவில்லை.. ஒருவேளை விஜய் தரப்பே இதை செய்ததா என்றுகூட தெரியாது.. ஆனால் விஜய் இதுவரை எதையும் ஓபனாக பேசவில்லை.. நேரடி அறிவிப்புகளையும் வெளியிட்டதில்லை.

 நிர்வாகிகள்

நிர்வாகிகள்

இந்த சமயத்தில்தான், சென்னை ஈசிஆரில் உள்ள பண்ணை வீட்டில், தனது இயக்க மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்தார்.. ஏற்கனவே யூகங்கள் வந்த நிலையில், விஜய் இப்படி பேச்சுவாரத்தை நடத்தியது மேலும் பரபரப்பை கூட்டிவிட்டது.. ஏனென்றால், இப்படித்தான் அன்றைக்கு ரஜினி தன் மன்ற நிர்வாகிகளிடம் சந்தித்து, அரசியல் சூழலை விவாதித்ததாக செதால்லப்பட்டதுஅ.. அந்த வகையில், விஜய் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துள்ளதும், அதுவும் தேர்தல் நடக்க உள்ள சமயத்தில் சந்தித்ததுதான் திரும்பி பார்க்க வைத்தது.

அட்வைஸ்

அட்வைஸ்

ஆனால், எந்த முக்கிய முடிவையும் அவர் எடுக்கவில்லையாம்... தன்னை தொடர்புபடுத்தி அரசியல் போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என்றுதான் அவர்களுக்கு அட்வைஸ் செய்தாராம்.. மேலும், மக்கள் இயக்கத்தின் மூலம் உதவிகளை செய்ய வேண்டும் என்றும், உறுப்பினர்களை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம்.

 நிலைப்பாடு

நிலைப்பாடு

எனினும், இன்னொரு தகவலும் இப்போது கசிந்து வருகிறது.. சட்டசமன்ற தேர்தலில், ரசிகர் மன்றம் கண்டிப்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கதான் போகிறதாம்... அதில், அதிமுக - திமுக கூட்டணிக்கு மாறாக உருவாகும் கூட்டணியை ஆதரிப்பது என்ற நிலை வரலாம் அல்லது அதிமுக - பாஜகவை சமாளிக்க திமுகவை விஜய் ஆதரிக்கவும் செய்யலாம் என்கிறார்கள்.

 பாமக

பாமக

இதன் உண்மை தன்மை நமக்கு தெரியவில்லை என்றாலும், அதிமுக - திமுகவுக்கு மாற்று எந்த கட்சியாக இருக்கும்? ஒருவேளை பாமகவா? அல்லது ரஜினி தலைமையிலா கூட்டணி? அல்லது பாஜகவா? அல்லது கமல் தலைமையிலான 3வது அணியா? என்றுதான் புரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்!

English summary
To whom will Actor Vijay give his support in the Assembly election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X