சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்

Google Oneindia Tamil News

சென்னை: உலகம் முழுவதும் இன்று சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

சகோதர- சகோதரி பாசத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்படும். இது பெரும்பாலும் வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. தாய், தந்தை, சகோதர- சகோதரி, காதலன்- காதலி, நண்பர்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஆகியோரை போற்றும் தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மே 24 ஆம் தேதி ஆண்டுதோறும் சகோதரர்களை போற்றும் வகையில் சகோதரர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற சொலவடை உண்டு.

Today Brothers day is being celebrated

இதற்கேற்ப எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் அண்ணன், தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு சமாளித்துவிடுவர் என்பது அனைவரும் அறிந்ததே. சில வீடுகளில் 5 வயதில் அண்ணன்- தம்பி, 10 வயதில் பங்காளி என்ற நிலையும் உள்ளது. ஆனால் இதையெல்லாம் மறந்து பிரச்சினைன்னு வந்துட்டா இருவரும் இணைந்து அதை சமாளிக்க போராடுவது வாடிக்கையே.

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்துதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்து

அண்ணன்- தம்பி உணர்வுகளையும் உறவுகளையும் போற்றும் தர்மத்தின் தலைவன், வேட்டை, முரட்டுக் காளை உள்பட பல திரைப்படங்களை நாம் கண்டுள்ளோம். அக்காள்- தங்கைகளை கொண்டாடுவது, தாய்- தந்தையை போற்றுவது ஆகிய அத்தனை குணங்களும் இவர்களிடம் உண்டு.

புராணங்களும் அண்ணன்- தம்பியின் பாசம் குறித்தும் வலிமை குறித்தும் உணர்த்தியுள்ளது. இது போல் உறுதியான பாசத்துடன் இருக்கும் அண்ணன்- தம்பிகளை வாழ்த்துகிறோம்.

English summary
Today Brother's day is being celebrated throughout the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X