சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் இன்று.. 5,546 பேருக்கு கொரோனா.. 5,501 பேர் டிஸ்சார்ஜ்.. 70 பேர் மரணம்.. குறையாத தாக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் 6 மாதங்களை கடந்தும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் தமிழகம் முழுவதும் இன்று 5,546 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 70 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி வீடு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவபர்கள் எண்ணிக்கை 46,281 ஆகும்.

Today Corona infected details in Tamilnadu

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,277 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டத்தில் 522 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 330 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 20-க்கும் குறைவானர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் தமிழகத்தில் இன்று 70 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 17 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தப்படியாக சேலத்தில் 9 பேரும் வேலூரில் 8 பேரும் கொரோனா காரணமாக இன்று உயிரிழந்துள்ளனர்.

தொற்று நோய் பரவல் தடுப்பு உட்பட 4 பிரிவுகள்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ந்தது போலீஸ் வழக்குதொற்று நோய் பரவல் தடுப்பு உட்பட 4 பிரிவுகள்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ந்தது போலீஸ் வழக்கு

இதேபோல் கொரோனா தொற்றில் இருந்து நலம் பெற்று வீடு திரும்பியவர்கள் விவரத்தை பார்த்தோம் என்றால் சென்னையில் 1,119 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 534 பேரும் அதிகபடியாக மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கொரோனா பாதிப்பு-உயிரிழப்பு-நலம்பெறுவது என இந்த மூன்றிலும் தமிழகத்தில் சென்னை முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Today Corona infected details in Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X