சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Gold Price: இப்படியெல்லாம் தடாலடியாக தங்கம் விலை ஏறினா.. எப்படித்தான் தங்க நகை அணியறது?

Google Oneindia Tamil News

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 288 உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ 36 உயர்ந்து ரூ 4952க்கு விற்பனையாகிறது.

கொரோனா காலத்தில் பெட்ரோல், டீசல் விலை ஏறியதை போன்று தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச பொருளாதாரம், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு, அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்டவற்றை பொருத்து தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

மாஸ்க் போடலைன்னாலும்... தள்ளி நிற்காவிட்டாலும் பைன் - மசோதா நிறைவேற்றம்மாஸ்க் போடலைன்னாலும்... தள்ளி நிற்காவிட்டாலும் பைன் - மசோதா நிறைவேற்றம்

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

தங்கம் விலை சவரனுக்கு 50 ஆயிரத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முந்தைய நாட்களில் அதன் விலை கணிசமாக குறைந்தது. இதனால் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என முதலீடு செய்து வந்த மக்கள் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றனர்.

தீபாவளி

தீபாவளி

கடந்த பல தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால் தீபாவளிக்குள் தங்கத்தின் விலை நிச்சயம் ரூ 60 ஆயிரத்தை நெருங்கும் என நகைக் கடைக்காரர்கள் தெரிவித்தார்கள்.

ஆபரணத் தங்கம்

ஆபரணத் தங்கம்

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.39,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.36 உயர்ந்து ரூ.4,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மக்கள் வேதனை

மக்கள் வேதனை

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.71.30-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளியின் விலை இப்படி உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

English summary
Gold price: Today Gold price increased to Rs 288 per sovereign of gold.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X